Weekend one shot story....!
கதிரும் முல்லையும்.....!💗💗💗
இரவு
கதிர் முல்லையின் உளறல் கேட்டு கண்விழித்தான்.
"சாவி போடணும். கிக்கற உதைக்கணும். ஆக்ஸிலேட்டர திருகணும்......!"
கதிர் எழுந்து உட்கார்ந்து முல்லையை பார்த்தான்.
அவள் உளறுவதை கேட்டு சிரித்தான்.
திடீரென ஐயோ! வண்டி நிக்கமாட்டேங்குதே.....!
அச்சச்சோ! என்றபடி உருண்டு புரண்டு கதிர் மேல் விழுந்தாள்.ஐயோ அம்மா.....! கை போச்சு! கால் உடஞ்சிடுச்சு.... ஐய்யோ....!
கதிர் அவளை அணைத்தவாறு, "ஏ... ஏய்.... கத்தாத.... ஒண்ணுமில்ல....!"
அவள் முதுகை தட்டிக்கொடுத்தான்.
முல்லை : "ஐயோ! எழுந்திருக்க முடியலயே யாராவது காப்பாத்துங்க.......! முல்லை கத்த அவள் வாயை மூடினான்.
அவள் மெதுவாக கண் விழிக்க,
அவன்மேல் படுத்திருப்பதை உணர்ந்து எழ முயற்சித்தாள்.
"இரு!" என்றபடி அவளை எழுப்பி தானும் எழுந்தான்.
முல்லை : ம்ம்.... கண்களை கசக்கிக்கொண்டே "ஏங்க நாம எங்க இருக்கோம்?"
கதிர் : "ம்?! சொர்க்கத்துல!"
முல்லை திடுக்கிட்டு, "என்னது?!"
கதிர் எழுந்து லைட் போட
முல்லை சுற்றி சுற்றி மிரட்சியாய் பார்த்தாள்.
கதிர் : ஏய்..... ரூம்ல தான் இருக்க. கனவு கண்டு கீழ விழுந்துட்ட. அவ்ளோதான்.
"கனவா....?! அப்பாடா....!" நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
கதிர் சிரித்து, "ஒரு வண்டி ஓட்டறதுக்கு என்னா அலப்பறை பண்ற?"
முல்லை "ஏங்க கனவு வந்தா நா என்னங்க பண்ணட்டும்? கனவு காண கூட இந்த வீட்ல உரிமை இல்லையா?"
கதிர் புருவத்தை உயர்த்தி, "நல்லா காணுங்க. ஆனா அடுத்தவங்கள புரட்டி எடுக்கற மாதிரி கனவு காண கூடாது."