கேரளா... பிரமாண்டமான மலைகள் மற்றும் அழகிய நீர் நிலைகள் காணப்படும் சிறந்த பூமி.. இங்கு சுற்றுலா துறையே முன்னணியில் இருக்கிறது.. கேரளா இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும் ..
இங்கு மலை வாசஸ்தலங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள், வணிக நகரங்கள், அழகிய குக்கிராமங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்... இவற்றை பார்வையிட குடும்ப விடுமுறையாளர்கள், ஹனிமூன் தம்பதிகள், தனி பேக் பேக்கர்கள் அல்லது சாகச பிரியர்கள் என அனைவருமே வருவது உண்டு..இந்த அழகிய பூமியில் தான் நம் கதையின் நாயகி தற்போது வசித்து வருகிறாள்.. அவளது சொந்த ஊர் சென்னை.. தாய் தந்தை இருவரும் அங்கு தான் உள்ளனர். ஆனால் இவளோ அவளது செல்ல மகள் பிரியதர்ஷினி உடனும் ,
தோழி ஊர்மிளா உடனும் சில வருடங்களாகவே கேரளாவில் தான் இருக்கிறாள்
.. நிரோஷினி இருபத்தி ஆறு வயதான பெண். அவளுக்கு மூன்று வயதான குட்டி பெண்ணும் இருக்கிறாள் ..ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து விட்டு தனது தோழியுடன் சேர்ந்து சுற்றுலா விடுதியை நடத்தி வருகிறாள்.. ஊர்மிளா கேட்டரிங் முடித்தவள் என்பதால் அவர்கள் இருவரும் சேர்ந்து இவ்விடுதியை நடத்துகின்றனர்..இங்கு குடும்பமாக வருபவர்களுக்கும், தனியாக வருபவர்கள் ,விஐபிக்கள், ஹனிமூன் ஜோடிகள் என அனைவரும் தங்கும்படி ஆக அறைகள் இருப்பது சிறப்பம்சமாகும் ...
இவர்களின் விடுதி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது இவர்களது... ரெஸாட் தொடங்கி மூன்று வருடங்களாகிறது...குழந்தை பிறந்த பின்னரே இதனை திறந்து வைத்தனர்.. அதன் பெயர் கூட தர்ஷினி ரெஸாட் தான்.
தோழிகள் இருவரும் ரெஸாட்டிலேயே இரண்டு அறைகளில் தங்கி வருகின்றனர்..அந்த அழகான காலை வேலையில்
எழுந்த நிரோஷனி குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்து பார்க்க போர்வைக்குள் உடல் முழுவதையும் திணித்து முகம் மட்டுமே வெளியே தெரியும் அளவு நித்திரையில் ஆழ்ந்து இருந்தாள் அவளது செல்ல இளவரசி பிரியதர்ஷினி...