தனது அலுவலக அறையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள் நிரோஷினி. அவன் அன்று பேசி விட்டு சென்ற பிறகு என்னவெல்லாம் நடந்து விட்டது... இனிமையாக சென்று கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் புயலாக வந்து சேர்ந்து விட்டான் அவன் மீண்டும். இதோ அதன் விளைவாக தனிமையில் அமர்ந்து கொண்டு இருக்கிறாள் அவள் ..எப்போதும் இந் நேரம் தர்ஷினி அவளுடன் தான் இருப்பாள். ஆனால் இன்று அவள் அவளுக்கு புதிதாக கிடைத்த தந்தையுடன் இருக்கிறாள் சந்தோஷமாக..
அன்று அவன் இரவு வா பேசலாம் என்று கூறிய பிறகு அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டாள். இனி என் வாழ்க்கை ?
என்ற கேள்வி மனதில் ஓட அமர்ந்து இருந்தாள் அப்படியே அவள்... சிறிது நேரம் கழித்து இருள் பரவுவதை உணர்ந்து எழுந்து அறைக்கு சென்றாள்... அங்கும் நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தவள் நேரத்தை பார்க்க இரவு எட்டு மணியைக் காட்டியது அது ..உடனே யோசனை வந்தவளாக அவசரமாக கிளம்பி அவனிடம் சென்றாள்..
இல்லை என்றால் அதற்கு வேறு அவள் ஏதாவது சொல்லுவான்..
செல்லும் வழியில் அவளை கண்ட ரம்யா
"வாழ்த்துக்கள் மேடம்..." என்றார்.. இவள் நின்று என்ன என்பது போல் அவரைப் பார்க்க
"அட என்ன மேடம் நீங்க... அன்னைக்கு தெரியாத மாதிரி அவரு கூட பேசினீங்க ..அவர் தான் உங்க ஹஸ்பண்டுனு சொல்லவே இல்லை எங்க கிட்ட..."
என்றார்...அதில் அவரை முறைத்துப் பார்த்தாள்..
உடனே ரம்யாவும்
"சாரி மேடம்.. உங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை இருக்குனு எனக்கு தெரியும்.. ஆனா நீங்க சொல்லலனாலும் உங்க பொண்ணு அப்பா வந்துட்டார்.. என்னோட அப்பா இவர்தான்னு இங்க இருக்க எல்லார் கிட்டயும் சொல்லிக் கிட்டு சுத்துறா..."என்றார் சற்று சங்கடமாக..