உயிரை கொல்லுதே காதல்❤️ 28

1.8K 42 0
                                    

     அடுத்து வந்த இரண்டு நாட்களிலேயே ஹரி மற்றும் ஊர்மிளா இருவரும் ஹனிமூனுக்காக மாலைதீவு சென்று விட்டனர். எப்போதும் போல் தர்ஷினி குட்டி காலையிலேயே தாத்தாவை வரவழைத்து அங்கு சென்று விட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு..
சாய் கிருஷ்ணா வீட்டிலேயே இருந்தான்.

       வேலையாட்கள் பெரிதாக  இல்லை.. காலை உணவை உண்டு விட்டு சமயல்கட்டு வேலைகளையும் முடித்தவள் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு அப்படியே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கி விட்டாள்.

    இந்த சில நாட்களாக நிரோஷினி சாய கிருஷ்ணாவின் முன் தனியாக செல்வது இல்லை. அவனுடன் பேச வேண்டுமென்றால் தர்ஷினியை  வைத்தே பேசுவாள்.. அவன் அறைக்கு  வருவதற்குள் தூங்கி விடுவாள்.. காலையில் அவன் எழுந்து கொள்ள முன்பே எழுந்து வெளியே சென்று விடுவாள்...

      அவளுக்கு அவளை நினைத்தே பயம்.. அவன் தொட்டால் உறுகி விடுவாள் அவள் ...தொட்டால் என்ன மூச்சு காற்று பட்டாலே போதும் அவளுக்கு.... எனவே தான் அவனிடமிருந்து விலகி செல்கிறாள் அவள்.

     அவளுக்கு அவனிடம் ஏதோ குறைவது போலத் தான் தோன்றுகிறது.. எனவே தான் அவனுடன் ஒட்ட முடியவில்லை... அவன் காதலை வார்த்தையால் சொல்ல தேவை இல்லை தான்.. அதற்கு முதல் காதல் என்று அவன் உணரவே இல்லையே ...

        இது வரை அவனது வாழ்க்கையில் அவன் எந்த பெண்ணிடமும் பேசிப் பழகாத காரணத்தினால் இது கணவன் மனைவிக்கிடையே இயல்பாக வரும் ஒரு வித ஈர்ப்பு எனவே நினைத்து இருக்கிறான் அவன்.. ஆனால் அவளுக்கு அது போதாது.. அவன் வார்த்தையில் மட்டுமல்லாமல் செயலால் கூட காதலை  உணர்த்தவில்லை..

       வயசு பையன்களை போல் வெறும் ஈர்ப்பு என்று நினைத்துக் கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுகிறான். சாதாரண கணவன் மனைவி போல் வாழ்ந்து குழந்தை வேண்டும் என நினைக்கிறான். அது அவளுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் அவனிடம் கடுமையாகப் பேச முடியாததாலும் அவனை தவிர்க்கிறாள்.

உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now