உயிரை கொல்லுதே காதல் ❤️10

3K 46 0
                                    

    
     அவன் பிடித்த பிடி வலிக்கவே தன்னை அவனிடம் இருந்து விடுவிக்கும் பொருட்டு அவனது கைகளை தனது இரு கைகளாலும் விடுவிக்கப் போராடினாள் நிரோஷினி ..
ஆனாலும் ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை  அவளால்...அவ்வளவு கெட்டியாக பிடித்திருந்தான் எஸ்.கே.


   அந் நேரம் கதவு திறக்கப் படும் ஓசையும் அதனூடே
"ப்பா ..." என்ற குரலும் கேட்க தனது கைகளை அவளது கழுத்தில் இருந்து எடுத்தான் அவன்... அவன் விட்டதும் தனது கழுத்தை இரு கைகளாலும் தேய்த்து கொண்டாள் நிரோஷினி கண்களில் கண்ணீர் வழிய...


     "ப்பா எப்ப வந்தீங்க?" என்று  ஓடி வந்து சாய் கிருஷ்ணாவின் கால்களை கட்டிக் கொண்டாள் தர்ஷினி... விளையாடிக் கொண்டு இருந்தவள் தந்தையின் கார் நிற்பதை கண்டு அவனை தேடி அறைக்கு வந்து இருந்தாள்..


       தர்ஷினி குட்டியை கண்டதும் தனது கண்களை துடைத்த நிரோஷினி அவளுக்கு காட்டாமல் குளியல் அறையில் புகுந்து கொண்டாள்.. அவனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு  அவளிடம் பேசிய படியே வெளியே சென்று விட்டான்.

       குளியல் அறையில் இருந்த நிரோஷினிக்குத் தான் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை... தனது பெற்றோரை பார்க்க தனது குழந்தையை விட மாட்டேன் என்கிறானே... என நினைத்து அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது ..என்ன நினைத்து என்ன ?
தான் மட்டுமாவது அங்கு செல்வது என முடிவெடுத்த படியே அவ்விடத்தில் இருந்து வெளியே வந்தாள்....

       தயாராகி வெளியே வந்த நிரோஷினி அங்கு இருந்த வேலையாள் ஒருவரிடம் தான் வெளியே செல்வதாகவும் அதனை சாய் கிருஷ்ணாவிடம் கூறும் படியும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்...

        வீட்டை விட்டு வெளியே வந்தவள் சற்று தூரம் நடந்து சென்று  ஆட்டோ ஒன்றை பிடித்து பெற்றோரை பார்க்க சென்றாள்.. இங்கு வேலையாள் சாய் கிருஷ்ணாவிடம்  வந்து அவள் கூறியதை கூற "ம்.." என்றவன் வேறு எதுவும் சொல்லாமல் குழந்தையுடன் விளையாட தொடங்கி விட்டான்.

உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now