ஊர்மிளா தனது தோழியின் வாழ்க்கையை பற்றியே யோசனை செய்து கொண்டு இருந்தாள்.. அவள் போன் பேசியதிலிருந்து இதே யோசனை தான் அவளுக்கு... "நேற்று போன் பண்ணி சொன்னாளே.. இப்போ போய் இருப்பாளா ? இன்னும் என்னவெல்லாம் பிரச்சினை வருமோ அவளுக்கு.. கடவுளே! அவளை எப்படியாவது காப்பாற்று அவனிடமிருந்து ..."என்று மனதில் நினைத்தவாறே வண்டி ஓட்டிக் கொண்டு சென்றாள்..
செல்லும் வழியெல்லாம் இதே யோசனை என்பதால் வளைவில் திரும்பும் போது முன்னால் வந்த காரினை கவனிக்காமல் அதில் சென்று இடித்துக் கொண்டாள். காரில் மோதியதால் ஸ்கூட்டி உடன் கீழே விழுந்தாள்... கார் மெதுவாக வந்ததால் அவளுக்கு பெரிதாக ஒன்றும் அடி ஏற்படவில்லை...
அவளா விழுந்ததும் காரும் பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து ஹரிதாஸும் அவனது டிரைவரும் பதட்டத்துடன் இறங்கி அவளிடம் ஓடி வந்தனர்..
" என்ன பாத்து ஓட்டிட்டு வர மாட்டீங்களா? யாரும் இல்லாததுனால பரவாயில்லை. அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சோ.." என்று டிரைவரை கடிந்து கொண்டே அவளிடம் சென்றான்...அதற்கு டிரைவர் மெதுவாக "நான் பார்த்து தான் சார் வந்தேன். அந்த பொண்ணு தான் பார்க்காம வண்டியை திருப்பிட்டா.." என்றான்.. அதற்குள் அவளோ மெல்ல எழ முற்பட வேகமாக வந்து அவளை தூக்கி நிறுத்தினான் ஹரி.
அதன் பிறகே அவளது முகத்தைக் கண்டான்..
உடனே " நீயா?... பார்த்து வர மாட்டியா?" என்று அவளையும் கடைந்து கொண்டவன் டிரைவரிடம் "ஹாஸ்பிடல் போகலாம்.. வண்டிய எடுங்க .."என்று கூறி அவளை விட்டு விலக முற்பட
"ஐயோ கால் வலிக்குது .?என்னால நிக்க கூட முடியல ."என்றவள் அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.."சரி அப்படியே என்ன பிடிச்சுக்க. உன்னால நடக்க முடியுமா? இல்லன்னா..." என்று அவன் சங்கடமாக இழுக்க
" இல்ல ...இல்ல.. மெதுவா நடந்துப்பேன்.. நீங்க என்னை விழாம பிடிச்சுக்கோங்க.. அதுவே போதும் ..."என்று கூறி மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தாள்..