உயிரை கொல்லுதே காதல்..❤️4

1.8K 43 4
                                    

       அவனது வார்த்தையில் இருந்த அர்த்தத்தில் கண்கள் கலங்கி இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது கண்களிலிருந்து...
ஆனால் குழந்தையோ "என்னாச்சும்மா எதுக்கு அழத?" என்றாள் தன் அன்னையிடம்... அதில் சுதாரித்துக் கொண்டு கண்களை துடைத்தாள் நிரோஷினி ...
"அது ஒன்னும் இல்லடா கண்ணுல தூசி விழுந்திருச்சு..." என்ற பதிலோடு...
" வா நா ஊதி விதுதேன்...." என்று குழந்தை தாய் கூறியதை உண்மை என்று நம்பி அவன் கைகள் இருந்தவாறே அன்னையை அழைத்தாள்..

    அதில் திடுக்கிட்ட நிரோஷினி
"இப்ப சரிடா இதோ பாரு அம்மா சிரிக்கிறேன்..." என்றாள் குழந்தைக்காக  முகத்தை சிரித்தவாறு வைத்து   கொண்டு...

     "பேபி உன்னோட அப்பா எங்கேடா?" என்றான் குழந்தையிடம் மென்மையாக... அதில் திடுக்கிட்டது என்னவோ நிரோஷனி தான்... அவனோ  குழந்தை என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்து இருந்தான்..
அதனால் நிரோஷினியை அவன் கண்டு கொள்ளவில்லை ...
"அப்பா ...."என்று தனது பிஞ்சு விரல்களினை நாடியில் வைத்து தட்டி தட்டி யோசித்தவள்
"தெரில ...."
என்று வாயைப்  பிதுக்கி இரு கைகளையும் விரித்துக் காண்பித்தாள்....

       அதில் திரும்பி நிரோஷனியை  ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் குழந்தையிடம்
"அம்மா உன்கிட்ட சொல்லலியா?" என்றான்...
தர்ஷினி குட்டியும்
" இல்ல ...."என்றாள்....

    "சரி இப்போ உன்னோட அப்பா இங்க வந்தா என்ன பண்ணுவ?" என்று அவளிடம் கேட்க கண்கள் மின்ன
"வதுவாதா?"
என்றாள் நம்பாத பாவனையுடன்.. அவனும் "ம்..."என்றான்.. குழந்தை எத்தனையோ முறை நிரோஷினியிடம்  கேட்பது உண்டு.. "அப்பா எங்கே?"
என்று...

       அவள் தான் இங்கு வரும் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதை கண்டு இருக்கிறாள் அல்லவா... அதனால் அடிக்கடி கேட்பது உண்டு எல்லோருக்கும் அப்பா இருக்கும் போது எனக்கு இல்லையே என்று... ஆனால் நிரோஷினியோ  ஏதேதோ சொல்லி சமாளித்து விடுவாள். சிறு குழந்தை என்பதால் தாய் சொல்லும் பொய் எல்லாம் கேட்டுக் கொள்வாள் குழந்தை ...அதை அந்த நிமிடமே மறந்தும் விடுவாள்..

உயிரை கொல்லுதே காதல்....حيث تعيش القصص. اكتشف الآن