உயிரை கொல்லுதே காதல் ❤️ 26

1.8K 44 2
                                    

‌‌ நிரோஷினிக்கு இவ்வாறு பேசும் சாய் கிருஷ்ணா புதிது .தனது தாய் இடையில் விட்டுப் போனதில் மனது உடைந்து போய் இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் அவள். இப்போது அவன் "எனது தாயை போல் நீயும் என்னை விட்டு போகாதே.." என்று யாசகம் கேட்பதை போல் கேட்கையில் அவளுக்குள் சொல்லொன்னா வலி ஏற்பட்டது..

இருந்தும் அதை அவனிடம் காட்ட வில்லை அவள் ..முன்பும் அவன் தான் என்னை விட்டுப் போ என்று கூறினான். இப்போதும் அவனே தான் என்னை விட்டு போகாதே என்றும் கூறுகிறான்.. அவனை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை..

அவளை கடைசி வரை அவனூடனேயே இருக்கும் படி கூறுகின்றான்... அவள் வேண்டும் என்றும் கூறுகின்றான்.. ஆனால் அது காதல் இல்லை என்கின்றான்.. இதில் எது தான் உண்மை என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.. இத்தனை வேலைகளுக்கு மத்தியில் அவளால் சரியாக கூட சிந்திக்க முடியாத நிலை...

அதே போல் சரி என்று உடனே அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை அவளால்... அவள் அவனைக் காதலிக்கிறாள் தான் இருந்தும் அவனுடன் சேர்ந்து வாழ அவனும் காதலுடன் இருக்க வேண்டுமே என்பது அவளது எண்ணம் ..எனவே இதை இப்போதைக்கு தள்ளிப் போட நினைத்தாள் அவள்.. ஹரி ஊர்மிளாவின் திருமணம் முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாள் அவள்..

எனவே அந்த முடிவில் உறுதியாக அவனைப் பார்த்தவள் "அது.... அதைப் பத்தி அப்புறம் பாத்துக்கலாம் ..முதல்ல கல்யாணத்தை நல்ல படியா முடிக்கலாம்.." என்று கூறி விட்டாள் நிரோஷினி ...
அவனும் அதே கெஞ்சல் பார்வையுடன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"கி..கிருஷ் ..."என்றாள் அவனது பார்வையில் அவன் மேல் பரிதாபம் தோன்றவே மெல்லிய குரலில்.. "என்ன ஹனி..?"என்றான் சிறு குழந்தை போல்.. அதில் அவன் பால் அவளது மனது போகத் தான் செய்தது..

இருந்தும் அதனை இறுக்கப் பிடித்துக் கொண்டு "எனக்கு இப்போ நிறைய வேலை இருக்கு ..கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதுக்கு அப்புறம் இதை பத்தி பேசலாம் .."என்று கூறியவள் வெளியே சென்று விட்டாள். அவன் தான் அப்படியே நின்று கொண்டு இருந்தான் அந்த இடத்திலேயே..

உயிரை கொல்லுதே காதல்....Donde viven las historias. Descúbrelo ahora