அவளது பார்வையை சட்டை செய்யாத சாய் கிருஷ்ணாவோ "அது சரி ஹரி எப்படி இடையில வந்தான்?" என்றான் அவளிடம் கேள்வியாக...
அவளோ '?"எனக்கு என்ன தண்டனைனாலும் குடுங்க ஹரிக்கு எதுவும் தெரியாது.. அவங்க பாவம் ..."என்றாள் பயத்துடனே...அவளுக்கு பயம் என்னவென்றால் ஹரி அவளால் அவனிடம் பேச்சு வாங்க வேண்டி வரும் என்பதே..
" உம் சொல்லு .."என்று அவன் அதிலேயே நின்றான் . எனவே வேறு வழி இல்லாமல் அன்று என்ன நடந்தது என்பதை அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள் நிரோஷினி..அன்று ஊர்மிளாவிடம் பேசி விட்டு வந்த ஹரியோ நர்ஸ் வந்து சொன்னதும் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் தானே நிரோஷினியை பார்க்க உள்ளே சென்றான்.. அப்போது தான் தனது கண்களை கஷ்டப்பட்டு திறந்து சுற்றிப் பார்த்தாள் நிரோஷினி.. அதே நேரம் உள்ளே நுழைந்த ஹரியும் அவளிடம் சென்றவன் "அண்ணி இப்ப எப்படி இருக்கு?வலி ஏதாவது இருக்கா ?"என்றான் கண்கள் கலங்க ..
"ம்ஹூம்" என்றாள் முணங்கலாக நிரோஷினி.. தலை வேறு விண் விண்ணென்று வலித்தது அவளுக்கு. அவளது கண்களோ ஹரிக்குப் பின்னால் யாரையோ தேடியது ..
அவன் பின்னால் யாரும் இல்லை என்பதை உணர்ந்தவள் சோர்வாக தனது கண்களை மூடிக் கொண்டாள். அதில் பதரிய ஹரி "அண்ணி என ஏதாவது பெய்னா இருக்கா..? டாக்டரை கூப்பிடட்டா..?" என்று கேட்க... இல்லை என்பது போல் கண்களால் சைகை செய்தவள் இதழ்களோ
"கிருஷ் ...தர்ஷினி ..."என்று முணுமுணுத்தது..அதில் புரிந்து கொண்டவன் "தர்ஷினி குட்டி நல்லா தூங்கிட்டு இருக்கா.. உங்க அம்மா கிட்ட தான் இருக்கா.. அண்ணா வெளியில் ஏதோ வேலை இருக்குன்னு போய் இருக்கார்.." என்று கூறியவன் அவளிடம் இப்போது இதைப் பற்றி பேசுவது சரியா என்று யோசனை செய்தவன் மறுநொடியே
"அண்ணி...." என்றான் தயக்கமாக.."ம்.." என்றாள் அவளும்.
" அது வந்து ..வந்து.. அண்ணா உங்களுக்கு பண்ணது பெரிய துரோகம் தான் .ஆனாலும் அவர் ரொம்ப பாவம் அண்ணி. சின்ன வயசிலேயே அம்மா எங்களை விட்டுட்டு போயிட்டாங்க. அதுல இருந்தே அவர் இப்படித்தான் ..இதை நான் இப்ப சொல்றது சரியா என்று கூட எனக்கு தெரியல. ஆனாலும் இதை சொல்லியே ஆகணும்.." என்று தங்களைப் பற்றி முழுவதையும் கூறி முடித்தான் அவன். இடையில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் நிரோஷினி.