இப்படியே ஒரு வாரம் கழிந்த நிலையில் நிரோஷினிக்கு இன்னுமே காயங்கள் சிறிதாக காணப்பட்டன. அதனால் ஊய்மிளாவும் தோழியையும் அவளது குட்டி தேவதையும் கவனிக்க வேண்டிய அங்கேயே தான் இருக்கிறாள்.. அவள் மறந்தும் கூட ஹரியை பார்க்கவே இல்லை ...
அவனோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. இதை எல்லாம் நிரோஷினியும் சாய் கிருஷ்ணாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.. ஆனால் எஸ்.கே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை..
நிரோஷினிக்கு இவை சரியாக புரியவில்லை ..ஏன் இருவரும் இப்படி இருக்கிறார்கள் என யோசிக்கும் மனநிலையிலும் அவள் இல்லை..நிரோஷினியை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் ஊர்மிளா. "எனக்கு இப்போ பரவாயில்லை.. கொஞ்சமா நடக்க முடியும்.." என்றாள் நிரோஷினி அவள் தனக்கு செய்யும் உதவிகளை மனதில் வைத்து மேலும் அவளை கஷ்டப் படுத்த விரும்பாமல்..
" என்ன நீ இப்படி பேசுற. நான் உன்னோட ஃப்ரெண்டுடி. உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன். இது சின்ன உதவி தானே.இதை செய்ய மாட்டேனா.." என்று கூறிய ஊர்மிளா அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை அமர வைத்தாள்..
அவள் பேசியதை கேட்டு புன்னகைத்தவள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் தர்ஷினியை பார்த்தாள்.. அவளோ அனைத்தையும் மறந்து தனது தந்தையுடன் குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தாள்
... இப்போதெல்லாம் சாய் கிருஷ்ணா , ஹரி இருவருமே நேரமே வீடு வருகின்றனர்..ஹரி வருவது ஊர்மிளாவை தூர இருந்தாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலினால்.. ஆனால் சாய் கிருஷ்ணா தான் மனைவியை பார்க்க வருகிறானா இல்லை மகளுடன் நேரம் செலவிட வருகிறான என்பது அவனுக்கே தெரியும்...
சில நாட்களாக போகும்போதும் வரும்போதும் நிரோஷினியை ஒரு மார்க்கமாகவே பார்த்து விட்டு செல்கிறான் சாய் கிருஷ்ணா.. அது அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.. அவளால் அவனுடன் மட்டும் இயல்பாக இருக்க முடியவில்லை ..ஆனால் அவனை பிடித்து இழுக்கிறது ..அவன் அருகில் இருந்தால் மனம் சிறகடித்துப் பறக்கிறது..