ஒரே காரில் தான் அனைவரும் பயணித்தனர் .. இன்று சாய் கிருஷ்ணா வண்டியை ஓட்ட அவனது அருகில் தர்ஷினியுடன் ஹரி அமர்ந்து கொள்ள பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் நிரோஷினி..
தர்ஷினியை மடியில் வைத்துக் கொண்டு அவளுடன் பேசியவாறே வந்ததால் கார் செல்லும் பாதையை ஹரி கவனிக்கவில்லை..
கார் நின்ற பிறகு நிமிர்ந்து பார்த்தவன் அது ஊர்மிளாவின் வீடு என்பதை உணர்ந்தவன் திரும்பி அண்ணனை பார்க்க
" வா உள்ளே போகலாம் ..."என்று அவன் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றான்..அவன் பின்னால் நிரோஷினியும் சொல்ல செய்வதறியாது நின்ற ஹரி தர்ஷினியை தூக்கிய படி அவர்களுடன் சென்றான்.. கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார் ஊர்மிளாவின் தந்தை யார் என்று பார்க்க ..அங்கு நின்ற நிரோஷினியை கண்டு முகம் மலர
" நிரு வா வா...ஏய் இங்க பாரு யாரு வந்திருக்காங்கன்னு?" என்று தனது மனைவியை அழைத்துக் கூறியவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்..அவர்களை அமரும் படி கூறியவர் நிரோஷினி இடம்
"எங்க போறீங்க நிரு.. ஏதாவது விசேஷத்துக்கு போறீங்களா?" என்று நிரோஷினி மற்றும் தர்ஷினியின் அலங்காரத்தை கண்டு கேட்டார்.
" அது வந்துப்பா..."என்று ஆரம்பிக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தனர் ஊர்மிளாவின் தாய் மற்றும் தம்பி...
அவர்களின் பேச்சு சத்தத்தில் அப்போது தான் ஊர்மிளாவும் வெளியே வந்தாள். இவர்கள் அனைவரின் வருகையாலும் பேச்சு பாதியில் நின்று போனது.. இவர்களை கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியாகித் தான் விட்டாள் ஊர்மிளா.. ஆனால் எதுவும் பேசாமல் நின்று கொண்டாள்.. ஹரி தனக்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் அமர்ந்திருந்தான்..இப்போது அனைவரும் அங்கு இருப்பதால் பேசலாம் என்பது போல் நிரோஷினி அருகில் இருந்த சாய் கிருஷ்ணாவை பார்க்க அவன் நீயே பேசு என்று கண்களாலேயே சைகை செய்தான்.. அவன் அப்படிக் கூறிய பிறகு எப்படி ஆரம்பிப்பது என்று யோசனை செய்தவாறே அனைவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.. அவளது பார்வையை புரிந்து கொண்ட ஊர்மிளாவின் தாய்