உயிரை கொல்லுதே காதல் ❤️17

1.6K 40 2
                                    

   இப்படியே அவர்களது வாழ்க்கை அவளைப் பொருத்தவரை இனிமையாகவே சென்றது.. அவளை அவன் வெளியே அழைத்துச் செல்வது இல்லை.. நிரோஷனி தான் தனியே சென்று பெற்றோர்களை சந்தித்து வருவது.


     தினமும் இரவில்  அவளை அவன் நாடுவது இல்லை ..அவளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே இரவில் ஓரிரு நாட்கள் மட்டுமே அவளை அவன் நாடுவான். அவளுக்கு அவன்மேல் சந்தேகமே கிடையாது..

   அவன் அவளிடம் காதலாக பேசவில்லை தான்... காதல் சொல்லவில்லை தான்.. இரவில் மட்டுமே முத்தமிடுவான்.. இருந்தும் அது அவன் இயல்பு என நினைத்து அவனுக்கும் சேர்த்து அவள் அவனை காதலித்தாள்.


     இப்படியாக திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் இரவு 7 மணி போல் ஆபீஸில் இருந்து வந்தவன் சோர்வாக சோபாவில் வந்து அமர்ந்தான். அவனது தோற்றத்தைக் கண்டு அவனிடம் வந்தவள்
"ஏன் கிருஷ் ஒரு மாதிரி இருக்கீங்க.. ஏதாவது ப்ராப்ளமா?" என்று அவனது தலையை கோதியபடியே கேட்டாள்.

    "ப்ச் அது எல்லாம் ஒன்னும் இல்ல.. விடு பாத்துக்கலாம்.." என்றான் சோர்வான குரலில்..
" ஏன் என் கிட்ட சொல்ல மாட்டேங்குறீங்க.. உங்களோட சந்தோஷத்துல மட்டும் இல்லை.. உங்க கஷ்டத்துலயும்  நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க.." என்று அவனிடம் அவள் கூற
"இப்படி வந்து உட்காரு.. சொல்றேன்..." என்றான் அவன்..

      அவன் சொன்னபடி அருகில் வந்து அமர்ந்து கொண்டவள் அவனது வார்த்தைகளுக்காக அவனது முகத்தையே பார்த்தபடி இருந்தாள்..
" எனக்கு ஹோட்டல் கட்ட ஒரு இடம் வேணும் .. இன்னும் சரியான இடம் கிடைக்இல..அதான் டென்ஷனா இருக்கு..' என்றான் சோர்வாகவே..



    " ஐயோ  இவ்வளவுதானா... இந்த பெரிய  சென்னையில இடமா இல்லை.. எப்படியும் கிடைச்சிடும் விடுங்க..." என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள் சிறந்த மனைவியாக ..ஆனால் அவனுக்கு அது போதாதாதே ..

  "அது   சூப்பர் லொகேஷன் ஒன்னு இருக்கு. ஆனா..." என்று அவளைப் பார்த்தவாறே கூறி நிறுத்தினான்.. "என்ன கிருஷ் இடம் இருந்தா எதுக்கு பார்த்துகிட்டே இருக்கீங்க..  கட்ட வேண்டியதுதானே... ஆனா ஆவன்னான்னு கிட்டு.." என்றாள் நிரோஷினி.

உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now