💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-07

155 8 1
                                    

உள்ளம் படபடக்க நடுங்கும் கரத்தோடு அவளின் உயிர் சுமந்த அவர்களின் காதல் சின்னத்தை எடுத்தாள்.

'எனக்கு பயமா இருக்கு. இப்போ எதுக்கு இது? உங்க குடும்பமும் ஊர்ல நல்ல மரியாதையான குடும்பம். அதனால நீ எங்கப்பா கிட்ட வந்து கேளு நிச்சயமா சம்மதிப்பார்.' என்றாள் கடைசி முறையாக.

பெருமூச்சு விட்டவன் அவளின் விழிகளையே நேருக்கு நேர் பார்த்தான்.

"சரி டா. நானும் வேற வழி இல்லாம தான் இவ்ளோ கட்டாய படுத்தினேன். ஆனால் உனக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருக்கும் பொழுது வேண்டாம் கண்ணம்மா." என்றான் மென்மையாக புன்னகைத்து.

இருந்தும் அவனின் விழிகளில் தெரியும் ஒரு தவிப்பையும் பயத்தையும் காண
அவளுக்கே என்னவோ போல் இருந்தது.

"இப்போ என்ன உனக்கு. இந்த உடம்புல என் உயிர் இருக்க வரைக்கும் அதுக்கு நீ மட்டும் தான் சொந்தக்காரன். புரிஞ்சுதா?" என்றாள்.

"என்னை தவிர உன்னை நெருங்க யாராலும் முடியாது" என்று கூறிக்கொண்டே அவளின் கழுத்தில் திடீரென்று தாலியை கட்ட, அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

"இருந்தாலும் ஒரு நுனி சான்ஸ் கூட நான்  யாருக்கும் விட்டு தரதா இல்லடா. நீ இல்லைன்னா நான் என்னைக்கும் பிணம் தான். இனி வாழ்நாள் முழுக்க உன் முகத்தை பார்த்ததே வாழ்வேன்." என்றாலும் அவளின் கரம் அவன் கன்னத்தில் பதிந்தது.

"இவ்ளோ தூரம் சொல்லியும் இப்படி பண்ணிட்டல்ல?" என்று விழிகளில் நீரோடு அவனை முறைக்க.

"சாரி டி. எனக்கு என்னவோ தப்பு நடக்க போகுது. உன்னை யாரோ என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிற மாதிரி ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருக்கு. எவ்ளோ சமாதானம் சொன்னாலும் என்னால அமைதியா இருக்க முடியலை. இனி எனக்கு பயமில்லை. நீ எவ்ளோ அடிச்சாலும் என்ன பண்ணாலும் வாங்கிக்குவேன். நீ எனக்கு சொந்தமாகிட்ட. யாரும் இனி உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது" என்றான் சோகமாய் சிரித்து.

💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேசNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ