'ஐயையோ! என்ன பண்றா? பார்த்துருவாளோ?' என்று இதயம் வேகமாய் துடிக்க, 'என்னை எழுப்பிருக்கலாம்ல? அவளுக்கு வாங்கின ட்ரெஸ் எல்லாம் கிழயே வச்சுட்டேனே? நைட்டே எடுத்துட்டு வரணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். எல்லாம் இவளால தான். இன்னைக்கு இல்ல ஏழு வருஷத்துக்கு முன்ன எப்போ இவளை பார்த்தேனோ அப்பயே எல்லாமே மறந்து மறந்து போகுது. உள்ளுக்குள்ள உட்கார்ந்துட்டு ஆட்டி வைக்கிறா என்னை...' என்று மனதிற்குள் வஞ்சித்தவன், அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
'இந்த ட்ரெஸ்... இந்த ட்ரெஸ்... இன்னுமா வச்சுருக்கான்? ' என்று அதை வருடியவள் மெல்ல அந்த சட்டையை முகர்ந்து அவன் வாசனையை ரசித்தாள்.
வெடுக்கென்று திரும்பி அவனை பார்க்க, அவள் திரும்பி நொடியில் விழிகளை மூடியிருந்தான் வருண்.
மறுபடியும் அதை நுகர்ந்தவள், ஆசையாய் போட்டுக் கொண்டாள்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் விழிகளில் தெரியும் அவனுக்கான அன்பையும் கண்டவன் அவளை வற்புறுத்தி தாலி கட்டியதால் மனதில் இருந்த சிறு நெருடலும் பறந்தோடியது.திடீரென அவள் விழிகள் கலங்குவதை கண்டவன், 'எதுக்கு இப்போ அழுகிறா?' என்று யோசித்து கொண்டே காண, அவளின் விழிகளும் அவனின் விழிகளும் ஒரே நேரத்தில் விரிந்தன.
'பார்த்துட்டா'
மெதுவாய் மிக மெதுவாய் அந்த சட்டையில் இருந்த தன் இதழ் தடத்தை வருடினாள்.
'ஆறு வருஷமாகியும் இதை அப்டியே வச்சுருக்கான். பொத்தி வைச்சு பாதுகாதிருக்கான்.' என்றவள் எண்ணம் அந்த நாளில் நடந்ததை நினைத்தது.
******
"வருண்! எங்க இருக்க?" என்றாள் தாரணி போனில்.
'காலைலயே போன் பண்ணிட்டா. என் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண போறா என் செல்லம்' என்ற குத்துக்களிப்பில், "காலேஜ் கிளம்பிட்டு இருகேன்டி.. நீ கிளம்பிட்டியா?" என்றான் உற்சாகமாய்.
"ஹ்ம்ம்.. எங்க வருண் எனக்கு டையர்டா இருக்கு... அதான் பேசாம லீவ் போடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்." என்றாள் தாரணி.
YOU ARE READING
💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச
Mystery / Thrillerதன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை