💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-19

114 5 0
                                    

"எனக்கும் அவனுக்கும் இப்போ புதுசா ஒரு கணக்கு முளைச்சிருக்கு மாமா. அதோட மூலகாரணம் நீங்க சொல்ல போறதோட தொடர்பிருக்கலாம்னு எனக்கு சந்தேகம் இருக்கு." என்றான் வருண்.

"என்ன மாப்ள ஏதாவது பிரச்சனையா?" என சாதாரணமாய் விசாரிக்கும் தன் தந்தையை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் தாரணி.

அவளின் விழி அசைவை கண்டுகொண்டவன் இதழ்கள் இதமாய் பூத்தது.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. இனி எல்லா பிரச்னையும் நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க. முதல்ல அந்த மதன் எப்படி உங்களுக்கு அறிமுகம் ஆனான்? சொல்லுங்க." என்றான் வருண்.

அவனின் கேள்வியில் அவரின் விழிகள் கலங்குவதை பார்த்தவன் திடுக்கிட்டு, "என்னாச்சு மாமா? ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" என்றான்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. என் பையன் மூலமா தான் அவன் எனக்கு தெரியும்." என்றார்.

"என்ன அண்ணாவா?" என்றாள் தாரணி உடனே.

"ஹ்ம் ஆமாம்மா. நாலு வருஷத்துக்கு முன்ன ஒருநாள் உங்க அண்ணனோட பிறந்தநாள் அன்னைக்கு அவனோட வீட்டுக்கு வந்தான்.

இவன் என்கூட படிச்சவன் பா. பேரு மதன்னு அறிமுகம் செஞ்சான்.

அதோட மாசத்துக்கு ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வருவான் இந்த மதன். பழக்க வழக்கம் எல்லாம் ரொம்ப நல்லவன் மாதிரி மரியாதையோட நடந்துப்பான். எனக்கும் உங்கம்மாக்கும் அவனோட கேரக்டர் பிடிச்சிருந்தது.

ஒரு ஆறு மாசம் போனப்புறம் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்னு சொன்னாங்க.

ஏற்கனவே நமக்கு இருக்க சொத்துக்களையும் பரம்பரை பிஸினஸை பார்த்துகவுமே நேரம் பத்தலை. அதனால இது சரிவராதுன்னு தோணுச்சு. அதுவும் பார்ட்னர் ஷிப் வச்சு பிஸ்னெஸ் ஆரம்பிக்க இப்போ எந்த அவசியமும் இல்ல.

எனக்கென்னவோ அது சரியா படலை. அதனால வேணாம்னு சொன்னேன்." என்று நிறுத்தினார்.

💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேசWhere stories live. Discover now