இருந்தாலும் அவளை பற்றியும் அவள் காதலை பற்றியும் அறிந்தவனாயிற்றே...
அதனால் பொறுமையாக அவளுக்கு நிலைமையை எடுத்து கூறினால் புரிந்து கொள்வாள் என்று முடிவெடுத்து எப்படி தொடர்பு கொள்வது என யோசித்து கொண்டிருந்தான்.
அவனுக்கென்ன வழியா தெரியாது.
அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறான் என்று நண்பனின் மூலம் தூது சொல்ல, பதறியடித்து ஓடிவந்தாள்.
இவன் நன்றாக அமர்ந்திருப்பதை பார்த்து கோபம் வந்து இரண்டு அரை விட்டு அவன் சட்டை காலரை பற்றி "ஏன்டா உனக்கு அடிப்பட்டுடுச்சுன்னு கேள்வி பட்டு உயிரை கையில புடிச்சு வச்சுக்கிட்டி ஓடி வரேன். நீ என்னடான்னா இவ்ளோ சாதாரணமா உட்கார்ந்துருக்க?" என்று கோபமாய் கத்தினாள்.
"சாரி டி. உன்னை பயமுறுத்தணும்னு இப்படி சொல்லலை. எனக்கு உன்கிட்ட முக்கியமா பேசியே ஆகணும். நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் நீ என்கூட பேசவே இல்லை. அதான் இப்படி பண்ணிட்டேன். என்னால உன்னை பார்க்காம இருக்கமுடியாதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று பாவமாய் கேட்டான் வருண்.
அவனையே சில நொடிகள் முறைத்து பார்க்க, மேலும் அவன்மேல் கோபம் கொள்ள முதுயமல் போகவே, வேகமாய் அணைத்துக்கொண்டாள்.
"ஏன்டா இப்படி பண்ண? என்னால மட்டும் உன்னை பார்க்க முடியுமா?" என்று கேட்டுக்கொண்டே அவன் நெஞ்சினில் செல்லமாய் அடிகளை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"செல்லம்! உனக்கு என் மேளா நம்பிக்கை இருக்குல்ல? என்னைக்காவது உனக்கு பிடிகாததை நான் செஞ்சுருக்கேனா? அப்படி இருக்கும்போது இவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கேன்னும் பொழுது என்ன காரணும்னு யோசிக்க மாட்டியா?" என்று ஆழமாய் அவளை நோக்கினான்.
"அந்த ஒரே காரணத்துக்காக தான் அன்னைக்கு அவ்ளோ கோவம் இருந்தும் அமைதியா போய்ட்டேன். இல்லன்னா என் அனுமதியில்லாம் தாலி கட்டினதுக்கு உன்னை கொன்னுட்டு நான் செத்திருப்பேன்." என்றாள் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு.
YOU ARE READING
💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச
Mystery / Thrillerதன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை