💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-25

85 6 2
                                    

"இவங்க முரளிண்ணா. அண்ணனோட க்ளோஸ் பிரென்ட். பாரின்ல படிச்சுட்டு அங்கையே வேலை பார்த்துட்டு  இருந்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்ன அண்ணனை பார்க்க வந்தவங்களை அம்மா அப்பாக்கு துணையா இருக்க சொல்லி கேட்டேன். அப்போலர்ந்து அம்மா அப்பாக்கு நிழலா இருக்கார். எது நடந்தாலும் இவரை தாண்டி தான் அம்மா அப்பாவை நெருங்கும். அவ்ளோ சேஃப்பா வச்சுருக்கார். ஆனா இவர் எங்க கூட இருக்கிறது எங்க மூணு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது. அதான் முரளிண்ணா. கண்ணுக்கே தெரியாம எல்லாத்தையும் கவனிப்பார்." என்றாள் தாரணி அழகாக சிரித்து.

"ஹலோ நான் வருண். உங்களை மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம்" என்றான் கரம் குலுக்கியபடி.

"உங்களை பத்தி எல்லாமே எனக்கு தெரியும்... மச்சான்... ஒரு நாளா ரெண்டு நாளா ரெண்டு வருஷம் உங்க புராணத்தை தான் தினமும் பாடுற குயில் ஒண்ணு எங்க வீட்ல இருக்கே..." என்று சிரித்தான் முரளி.

"அய்யோ அண்ணா. ஏன்னா...? நீங்க வேற போங்கண்ணா.." என்று முகம் சிவக்க வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

'அய்யோ சிரிச்சாலே தாங்க மாட்டேன்.. இதுல வெட்கப்பட்டு சிரிச்சே சாவடிக்கிறாளே?' என்று மயங்கினாலும் யாரும் கவனிக்காத நேரத்தில் தாரணியை பார்த்து கண்ணடிக்கவும் குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரையேறியது.

"அய்யோ தாரணி.. பார்த்து பார்த்து.. தண்ணி கூட அவசரமா தான் குடிக்கணுமா? கல்யாணமே ஆகிடுச்சு இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க... எப்படி தான் மாப்பிள்ளை சமாளிக்க போறாரோ?" என்று திட்டி கொண்டே தலையில் மெதுவாக தட்டினான் முரளி.

சிரிப்பை அடக்கியபடி ஏதுமறியாதவன் போல், "பார்த்து தாரு.. என்ன அவசரம் உனக்கு?" என்றான்.

'உன்னை... எல்லாம் உன்னால தான் திட்டு வாங்குறேன். இரு இரு கவனிச்சுக்குறேன்.' என்று முடிந்த மட்டும் வருணை முறைத்தவள் "அம்மா நாங்க கிளம்புறோம்." என்றாள்.

💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேசWhere stories live. Discover now