"இப்போ என்ன பண்றது? என் குடும்ப மானத்தையே இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டாளே?" என்று சங்கீதாவின் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
வருணின் தந்தை வருணிடம் நெருங்கி, "வருண் இப்போ நம்ம மொத்த குடும்பத்தோட மானமும் உன்கிட்ட தான் பா இருக்கு." என்றார்.
"என்னப்பா சொல்றிங்க?" என்றான் ஒன்றும் புரியாமல்.
"இப்போ இவளை ஏமாத்தினவன் உயிரோட இருந்தா கூட அவனை எங்கிருந்தாலும் தேடி கொண்டு வந்து தாலி கட்ட வைக்கலாம். ஆனா, அவன் உயிரோடவே இல்லை. இனி இவளோட வாழ்க்கையே கேள்விக்குறி தான். அதனால..." என்று தயங்கினார்.
"அதனால.." என்றான் நெஞ்சம் படபடக்க.
அப்படி எதுவும் இருக்க கூடாதென்று வேண்டிக்கொண்டே.
"நீயே நம்ம சங்கீதாவை கல்யாணம் பண்ணிக்கோப்பா." என்றார் மெதுவாய்.
"அப்பா என்ன பேசறீங்க? புரிஞ்சு தான் பேசுறீங்களா?" என்று கத்திவிட்டான்.
"எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்டா." என்றார் அவரும் விடாமல்.
"முடியாதுப்பா. சங்கி நான் தூக்கி வளர்த்த பொண்ணு பா. அவளை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க? அவசரப்படாதீங்க எதுவா இருந்தாலும் பொறுமையா பேசி முடிவெடுப்போம்." என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் மாமா வேகமாய் வெளியேறினார்.
அவரை கவனித்த எல்லோரும் அவரின் பின்னே ஓட, வேகமாய் பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார்.
"மாமா..." என்று கதவை தட்டினான் வருண்.
"அண்ணா.. தயவு செஞ்சு வெளிய வா ண்ணா" என்றார் அவனின் அம்மா.
"மாமா. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நாம் சமாளிப்போம். வெளிய வாங்க." என்றான் வருண்.
கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே மின்விசிறியில் புடவையை கட்டிக் கொண்டிருந்தார் சங்கீதாவின் தந்தை.
"அய்யோ என்னங்க.."
"அப்பா.." என்று கதறிக்கொண்டே அருகில் ஓடினாள் சங்கீதா.
YOU ARE READING
💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச
Mystery / Thrillerதன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை