7

151 17 19
                                    

அதன் பின் மூன்று நாட்கள் எப்பொழுதும் போல செல்ல அன்று அந்த பயிற்சி வகுப்பின் இறுதி நாள் ஆகும் . அன்றைய நாள் என்றும் போல பயிற்சிகளும் தேர்வுகளும் முடிய அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் வந்து அந்த பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு அங்கேயே மதிய உணவை முடித்து விட்டு செல்லுமாறு பணித்தார் .

சஞ்ஜீவின் கண்களோ நொடிக்கொருமுறை அதுல்யாவை தொட்டு மீள அவனின் மனமோ அவனே அறியாதோர் தவிப்பை சுமந்திருந்தது . அவளோ இது எதுவும் கருத்தில் பதியாமல் மேகாவுடன் சிறிது பேசியபடி ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருந்தாள்.

மேகா ஆவலுடன் பேசியபடி இருந்தவள் எதேர்ச்சியாய் சஞ்சீவை நோக்க அவன் பார்வை நொடிக்கொருமுறை அதுல்யாவை தொட்டு மீள்வதை கண்டு கொண்டாள் .

அவளிற்கும் சஞ்சீவிற்கும் அதுல்யாவினால் ஒரு சில தருணங்களில் பேச்சுக்கள் நடந்துள்ளது எனில் அவளோ அவனோ அத்தனை அதிகமாக உரையாடியதில்லை . உரையாடியதில்லை என்றாலும் அவன் மேல் ஒரு அண்ணனின் பிம்பம் மேகாவின் மனதில் தோன்றி இருந்தது .

மேகா " நீ இங்கயே இரு அத்து எனக்கு ஒரு கால் பண்ணனும் " என்று விட்டு வெளியே சென்றவள் செல்லும் முன் சஞ்ஜீவிற்கு கண் காட்டி விட்டு செல்ல சஞ்ஜீவ் அவளில் செய்கையில் அதிர்ந்தாலும் பின் மெல்லிய புன்னகை அரும்ப அதுல்யாவின் புறம் சென்றான் .

அவளோ அவனின் புறம் சிரிப்புடன் திரும்பியவள் " என்ன டீச்சர் சார் இங்க ?" என்று கேட்டபடி ஐஸ்கிரீம் சாப்பிட

அவனோ அவளை பார்த்து சிரித்தவன் " அதான் கோர்ஸ் முடுச்சுட்டியே அப்பறோம் என்ன டீச்சர் சார் " என்று கேட்க

அவளோ " ஆமா ஒரு வழியா இந்த ரூல்ஸ் ராமானுஜன் கிளாஸ்ஸஸ்லேந்து இனி எஸ்கேப் ஆயிட்டே . இன்னைக்கு ஏதாவது plans இருக்கா உங்களுக்கு ?" என்று கேட்டபடி ஒரு icecreamai எடுத்து அவனிடம் நீட்ட

அவனும் புன்னகையுடன் வாங்கி கொண்டவன் " ஏன் கேக்குற ?" என்று கேட்க

மறப்பதில்லை நெஞ்சேWhere stories live. Discover now