அதுல்யா அந்த சென்னை விட் கல்லூரியின் படிவத்தை வருடியவள் தனது அலைபேசியை எடுத்து அதில் சஞ்சீவின் எண்ணை திறந்தவள் " கிளம்பிட்டேன் நீங்க ரீச் ஆயிட்டிங்களா ?" என்று கேட்க
அவனோ அப்பொழுது தான் தனக்கென அந்த வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு மெத்தையில் படுத்திருந்தான் . அலைபேசியின் நோட்டிபிகேஷன் ஓசையில் அதை எடுத்து பார்க்க அதுல்யாவிடம் இருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது . அதை பார்த்து இதழ் விரித்தவன் " வந்துட்டேன் மா நீ கெளம்பிட்டியா ?" என்று கேட்க
அவளும் அவனிடம் இருந்து உடனே வந்த குறுஞ்செய்தியை படித்து இதழ்விரித்தவள் " இப்போ கிளம்பிட்டேன் இன்னும் 2 மணி நேரத்துல போயிருவேன் மத்தியானம் சாப்டாச்சா இல்ல ட்ராவல்னு சாப்பிடலையா?" என்று கேட்க
அவனோ அவள் கேள்வி மனதில் இளம்சாரல் ஒன்றை வீசச்செய்ய " சாப்டுட்டேன் மேடம் " என்று கூறி சென்றபின் செய்தி அனுப்ப கூறலாமா வேண்டாமா என்று யோசித்தபடி எழுதி எழுதி அழிக்க அவளோ அங்கு அவன் எழுதி எழுதி அழிப்பதை பார்த்து அவன் ஏதும் பதில் அனுப்பாததில் முகம் சுருக்கினாள் .
அவன் அனுப்பவா வேண்டாமா என்பர் பட்டிமன்றம் நடத்த அவளோ " ரீச் ஆயிட்டு text பண்ணுனு கூட சொல்ல மாட்டிங்களா ?" என்று கேட்க
அவனோ சிறு புன்னகையுடன் " நீயே சொல்லிருவ னு தெரியும் . " என்று அனுப்ப அவளோ அப்பொழுது தான் அவன் இதை அனுப்ப தான் அத்தனை நேரம் அழித்து அழித்து எழுதியிருக்கிறான் என்று புரிய மனதில் லேசாய் ஒரு குறுகுறுப்பு எட்டி பார்க்க சிரிப்பும் வந்தது.
அடுத்த குறுஞ்செய்தியாய் " அதெல்லாம் நாங்க அனுப்பிருவோம் உங்கள மாதிரி அனுப்ப நெனச்சு அழுச்சுட்டுலாம் இருக்க மாட்டேன் . பை " என்று கூறி offline சென்று விட
அவனோ அவளின் செய்தியில் கண்களை விரித்தவன் " எப்படி தான் இப்டி என்ன கண்டுபிடிக்குறாளோ ராட்சசி " என்று நினைத்து சிரித்தபடி சிறிது நேரம் உறங்கினான் .