அந்த வாரம் அமைதியாக கழிந்தது . அதன் பின் அதுல்யா விடுதிக்கு கிளம்பி சென்று விட சஞ்ஜீவ்வும் தனது வேளைகளில் கவனமாகி இருந்தான் . இருவருக்குள்ளும் காதல் என்று கூறிவிட்டதால் ஒன்றும் இமாலய மாற்றம் நிகழ்ந்து விட வில்லை. எப்பொழுதும் போல பார்க்கும் பொழுதுஹ் பேசிக்கொண்டனர் நேரம் கிடைக்கும் நேரத்தில் குறுஜெய்தி அனுப்பிக்கொண்டனர் . அந்த ரகசிய ரசனைகள் கலந்த பார்வை மட்டுமே மாறி இருந்தது. .
அதுல்யா விடுதிக்கு சென்று நான்கு நாட்கள் கடந்திருக்க சஞ்ஜீவ் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . அப்பொழுது அவனது அலைபேசி அடிக்க அதை எடுத்தவன் அத்துலயாவின் எண்ணை பார்த்து ஒரு நொடி புருவம் சுருக்கியவன் எடுத்து காதில் வைத்து " வேலை பாத்துட்ருக்கேன் அப்புறம்... " என்று கூறி முடிப்பதற்குள் அவளின் விசும்பல் சத்தம் அவனது பேச்சை தடைப்படுத்தி இருந்தது .
அவளின் விசும்பலில் இருந்தே அவள் அழுகிறாள் என்று அறிந்து கொண்டவன் பதட்டம் எழுந்தாலும் தானும் பதற்றமடைந்தால் அவளை தேற்றுவார் யார் என்று எண்ணியவன் " ஏய்ய் அத்து என்னாச்சு மா ?" என்று கேட்க
அவளோ " எனக்கு... எனக்கு .... உங்கள பார்க்கணும் " என்று கூற
அவனோ என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறியவன் முயன்று குரலை நிதானமாக்கி " என்ன ஆச்சுன்னு சொல்லாம நீ அழுதுகிட்டே இருந்தா நா என்னனு நெனைக்குறது ? என்ன நடந்துச்சுனு சொல்லு மா "
என்று கூற
கொஞ்சம் கொஞ்சமாக விசும்பல் மட்டுப்பட " எனக்கு உங்கள பாக்கணும் ... " என்று மெல்லிய குரலில் மீண்டும் கூற
அவனோ நேரத்தை பார்த்தவன் அது ஒன்பது என்று காட்ட அடுத்த ஒரு மணி நேரம் உணவு நேரம் என்பதை உணர்ந்தவன் எனினும் தான் அவள் கூப்பிட்டவுடன் அங்கே சென்றால் எந்த பிரச்னை வந்தாலும் தன்னை தான் தேடுவாள் என்று நினைத்தவன் ஓட துடித்த கால்களை கட்டுப்படுத்தி "அம்மு ... என்ன நடந்துச்சுனு சொல்லு டா " என்று கூற