20

122 14 7
                                    

சஞ்ஜீவ் வெளிநாடு சென்று ஒருமாத காலம் உருண்டோடி விட்டிருந்தது . சுபத்திராவிற்கு இறுதி செமஸ்டர் நடந்துகொண்டிருக்க மசக்கையும் சேர்ந்து பாடாய் படுத்தியது ஒருபுறமென்றால் அவளின் மாமியாரின் குத்தல் பேச்சுக்கள் மறுபுறம் அவளை சீண்டியது . என்ன தான் மாமனாரும் கணவனும் அவளை தாங்கி அவள் மாமியாரிடம் சண்டை இட்டாலும் அவளிற்கு அவரின் குத்தல் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குத்தீட்டியாய் இதயத்தினுள் இறங்கி கொண்டிருந்தது . அது எவ்விதமான எதிரவ்வினைகளை ஏற்படுத்த இருக்கிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

சஞ்ஜீவ் அங்கு சென்று இறங்கியதிலிருந்தே அவனிற்கு அதுல்யாவிற்கும் ஒரு வித இடைவெளி விழுந்ததாக உணரத் துவங்கி இருந்ததென்னவோ உண்மை . கால நேரம் மாறுதல்கள் , அவள் fresh face of the year போட்டியை ஜெய்திருக்க அவளின் மாடெல்லிங் வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கி இருந்தது , அவனிற்கு சீதோஷண நிலை மாறியதில் ஒவ்வாமை என்று ஒருவழி ஆகினர் இருவரும். ஒன்றாக இருந்தபோது இடாத சண்டைகள் அனைத்தும் மொத்தமாக போட்டுக்கொண்டது போல் ஆனது இருவர் நிலையும்.

இந்தியாவிலிருந்தபோது அவளுடன் வெளியில் சென்றபொழுதோ அவளுடன் ஒரு அறையில் தனிமையில் இருந்தபோது தோன்றாத உணர்வுகள் அனைத்தும் வெளிநாடு வாசத்தின் முதல் மூன்று மாதத்திலேயே அவனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருந்தது . அவன் நிதம் நிதம் பொதுவெளிகளில் காணும் காதல் காட்சிகளின் தாக்கங்களாக கூட அது இருக்கலாம் . அவளின் வயதை கருத்தில் கொண்டு பேச்சில் கண்ணியம் காக்க நினைப்பவன் அதை அவளிடம் கோபமாக அவனறியாது வெளிப்படுத்த அவளோ அவனின் திடீர் மாற்றத்தில் எரிச்சலில் சுற்றிக்கொண்டிருந்தாள். இதில் அவனின் அன்னைக்கு வேறு அவள் மாடெல்லிங் செய்வது அத்தனை உவப்பானதாக இல்லாது போக அவரிற்கு புரியவைத்து செரிக்கட்டுவதற்குள் ஒருவழி ஆகி இருந்தனர் இருவரும் . அதற்கும் இவள் தான் அதிகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது.

மறப்பதில்லை நெஞ்சேWhere stories live. Discover now