இன்று ....
பல வருடங்கள் கழித்து சஞ்ஜீவின் கண்கள் உறக்கத்தை தழுவியிருக்க காலையில் ஏதோ உருளும் சத்தத்தில் தான் கண் விழித்தான் . மணியோ காலை ஆறு என்று காட்ட படுக்கையில் தனதருகில் மனைவியின் முகம் காண ஆவலுடன் நோக்கியவனிற்கோ வாயை சற்று பிளந்தபடி உறங்கும் மகளே கண்ணில் விழுந்தாள் . அவளின் பிளந்த வாயை கண்டு சிரித்தவன் " அப்டியே அவங்க அம்மா மாறி " என்று கூறியபடி அவள் உறக்கம் கலையாமல் கன்னத்தில் முத்தம் பதித்தவன் காலை கடன்களை முடித்துவிட்டு மனைவியை தேடி செல்ல அவளோ பரபரப்பாக இரவு உடையுடன் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் .
அவளை கண்டு புன்னகைத்த சஞ்சீவ் "குட் மார்னிங் " எங்க அவளோ சட்டென்று கேட்ட குரலில் பதறி நெஞ்சில் காய் வைத்தவள் அவனை கண்ட பின்னே சற்று ஆசுவாசமாகி குட் மோர்னிங் என்று சிறிய குரலில் கூறியவள் மீண்டும் அடுப்பின் பக்கம் திரும்பி விட்டாள் .
சஞ்சீவ் அவள் பரபரப்பாய் வேலை செய்வதை பார்த்தவன் அவளிடம் பேசுவதற்கு அவகாசம் பார்த்து காத்திருக்க அவளோ அவனிற்கு ஒரு கோப்பையில் குழம்பிய ஊற்றி அவன் முன் வைத்து விட்டு மீண்டும் வேலை பார்க்க துவங்கி விட்டாள் .
அவளிடம் பேச சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவன் அவள் குளம்பியை வைத்து விட்டு வேலை பார்க்க துவங்கவும் " இன்னைக்கு காலேஜ் போகணுமா ?" என்று கேட்க
அவளோ அவனை திரும்பி பார்த்தவள் " ஆமா பரிட்சை நடந்துட்டருக்கு " என்று கூற
அவனோ அவளின் கட்டுத்தறித்த பேச்சில் அடுத்து எப்படி துவங்குவது என்று தெரியாமல் திண்டாடினான் " எப்போ வருவ ?"
அதுல்யா " 5 மணி ஆகும் ."
சஞ்சீவ் " ஓஒ ஷிவுவ நான் ஸ்கூல் கூட்டிட்டு போகவா ?" என்று கேட்க
அவளோ அவனை திரும்பி பார்த்தவள் " அவளுக்கு லீவு விட்டு நாலு நாள் ஆகுது அடுத்த மாசம் தான் ஆரம்பிக்கும் " என்று கூறிவிட்டு பாத்திரங்களை ஒதுக்கியவள் அவன் அவற்றை கழுவ செல்வதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு " பாத்திரம் கழுவ ஆள் வருவாங்க ஏதும் செய்ய வேண்டாம் . " என்றவள் " மறுபடி எப்போ வேதாளம் முருங்கைமரம் ஏறுமோ " என்று முணுமுணுத்தபடி அவனை தாண்டி செல்ல அவனோ இதற்கே முழி பிதுங்கி நின்றான் .