நாட்கள் அப்படியே சிறு சிறு ஊடல்களுடனும் சமாதானங்களுடனும் செல்ல அதுல்யா நினைத்தது போல் அத்தனை சிரமங்களை அர்ஜுன் அவளிற்கு கொடுக்கவில்லை. பிடிக்கவில்லை என்றதும் ஒதுங்கிக்கொண்டான் என்றே அவள் நினைத்திருக்க அவன் விரைவிலேயே ஒரு பெரும் புயலோடு வருவான் என்று நினைத்திருக்கவில்லை . தற்சமயம் அவள் இறுதி ஆண்டில் இருக்க சஞ்ஜீவ் வெளிநாட்டு வாசத்தின் இறுதி ஆண்டில் இருக்கிறான் . நடை உடை பாவனை ஏன் உச்சரிப்புகள் கூட மாறிவிட்டன எனில் அவனுள் மாறாதது அவனின் அம்மு மேல் அவன் வைத்த நேசம் தான் .
இடைப்பட்ட காலங்களில் மேகா மற்றும் சஞ்சீவினி உறவு பலப்பட்டிருத்தது . ஆரம்பத்தில் அதுல்யாவிற்கும் அவனிற்குமான பாலமாக இருந்தவள் அதன் பின் அங்கே மூன்றாம் வருடம் பயில்கையில் ஸ்டுடென்ட் exchangeil அவளும் சஞ்ஜீவ் இருக்கும் ஊரில் உள்ள கல்லூரியிலேயே சேர அவளிற்கான மொத்த பொறுப்பும் சஞ்ஜீவுடையதானது . சுபத்ராவிடம் கூட அவன் காட்டிகொள்ளாத அனைத்து குறும்புகளை மேகாவிடம் வெளிப்படுத்தும் அளவிற்கு முன்னேறி இருந்தது அவர்களின் அண்ணன் தங்கை உறவு . இருவரும் சேர்ந்து அதுல்யாவை அலறவைக்கும் சமயத்தில் அவள் தான் திணறிப்போவாள்.
அனைத்தும் நல்லவிதமாக தான் சென்றுகொண்டிருந்தது . அன்றைய நாள் வரும் வரை.சஞ்ஜீவ் அன்று இந்திய திரும்பும் நாள்.அதுல்யா மிகுந்த ஆரவாரத்துடனும் ஆனந்தத்துடனும் புறப்பட்டு விமான நிலையம் வந்து நின்றுகொண்டிருந்தாள் .மேகா ஒரு வருட student exchange முடிந்து 6 மாதம் முன்பே திரும்பி விட்டிருந்தாள் . சக்தி இவர்களுடன் தான் இருந்தான் எனில் அவன் பார்வை என்னவோ மேகாவிடம் தான் இருந்தது .
வருடங்கள் உருண்டோடி விட்டது எத்தனையோ விஷயங்கள் மாறி விட்டது எனில் மாறாததென்னவோ அவனிற்கு மேகாவிற்கும் இடையிலான இந்த மௌனப்போர் தான் . அவள் அவனது இருப்பை கருத்தில் என்ன கடைக்கண்ணால் கூட பார்க்கவில்லை.
அவனும் எத்தனையோ பெண்களை கடந்து வந்து விட்டான் அவை கடந்து செல்லும் மேகங்களாக இருந்ததே ஒழிய இவள் போல் அவரை வேரோடு சாய்க்கும் புயலாய் அவன் மனமெங்கும் மையம் கொண்டதில்லை. அன்று அவன் நடந்துகொண்ட முறைக்காக அவன் வருந்தி மறுகாத நாட்கள் இல்லை எனில் ஒருமுறை தொலைத்த பொக்கிஷம் மறுமுறை கை சேருவதில்லையே . பெருமூச்சொன்று விட்டவன் பாதையை வெறிக்க சஞ்ஜீவ் பயணப்பொதிகளுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் .