15

127 13 3
                                    

அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தவன் கதவில் பதட்டத்தோடு தட்டப்பொகும் நொடி நிதானித்தான். இதை இவ்வாறே அவன் சென்று வீட்டில் உள்ளவர்களின் முன் உடைத்தால் அவன் வீட்டில் உள்ளவர்களின் நிலை என்ன ? அவன் தந்தை ? அவன் தாய் ? அவன் தங்கையின் மானம் ?

கண்களை இறுக மூடி கைகளை பின்னால் எடுத்தவன் அதுல்யாவின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை நினைதுப்பார்த்தான் ஒரு பெருமூச்சுடன் கதவை தட்டியவன் பதிலிற்கு காத்திருக்க அவனிற்கு கதவை திறந்து விட்டது என்னவோ அவன் தங்கை தான் .

அவளை அவன் கூர்ந்து பார்க்க அவளோ என்றும் இல்லாத திருநாளாய் கண்கள் வீங்கி அமைதியாக வழியை விட்டு நீங்கி நின்றவள் அவனின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள் . அவனோ அவளை பார்த்ததும் எழுந்த கோபத்தை அடக்கியபடி ஆராயும் பார்வையோடு உள்ளே சுற்றி பார்க்க வீடு வெற்றுக் கூடமாக காட்சி அளித்தது .

சஞ்சீவ் அவளின் புறம் திரும்பியவன் " வீட்ல யாரும் இல்லையா ?" என்று கேட்க அவளோ " I இல்ல அண்ணா ..... அம் அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு போய் இருக்காங்க"

அவனுக்கு அதற்குப் பின் என்ன சொல்வது என்று தெரியவில்லை சிறிது நேரம் அப்படியே நின்றவன் தன் தங்கை மீண்டும் அறைக்குள் செல்ல திரும்புவதை உணர்ந்து அவளது கையைப் பற்றினான் .

சுபத்ரவின் கைகளோ பயத்தில் நடுங்க ஆரம்பித்துவிட சஞ்ஜீவோ அவளை திருப்பியவன் கோபத்துடன் கண்கள் சிவந்து " என்ன காரியம் பண்ணிக்க சுபா " என்று கேட்க

அவளோ முயன்று தன்னை கட்டுப்படுத்தியவள் வரவழைக்கப்பட்ட கோபத்துடன் " வந்த... வந்த ஒடனே ஆரம்பிக்காத என்ன உனக்கு பிரச்னை ?" என்று கேட்க சஞ்ஜீவ் அவளின் கையை விட்டவன் அவனின் அலைபேசியை அவள் கண் முன் நீட்டினான் . அதை கண்ட சுபத்ரவின் விழிகளோ அச்சத்தில் விரிந்து உதடு துடிக்க சிலையாய் சமைந்திருந்தாள் . அது அவள் அவளது காதலனுடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் .

மறப்பதில்லை நெஞ்சேWhere stories live. Discover now