ஆனந்த பைரவி 5💞

510 23 10
                                    

தந்தையின் சடலம் கிடத்தி வைக்க பட்டு இருக்க அதின் முன் பல கேள்விகளோடு நின்று இருந்தான் சச்சின்....மனம் முழுக்க அவர் இறந்த வேதனை ஒருபுறம் தான் காதலித்த பைரவி இனி அண்ணன் மனைவி என்ற செய்தி ஒருபுறம் அவனை வதைத்து கொண்டு இருந்தது....ஏன் ஏன் ஏன்...என கேள்விகள் எழுந்தாலும் அதற்கு பதில் தெரிந்த ஒரே நபரும் இப்போது இந்த உலகில் இல்லயே......???

கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த புதிய தாலியையும் சடலமாக இருந்த தன்னை மகளென வளர்தவரையும் பார்த்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள்....அவள் மனதிலும் கேள்விகள் தான்....அதை விட இனி தன் வாழ்வு எப்படி இருக்க போகிறது என்ற பயம் ஒருபுறம்....???மனதில் தனாவிடம் கேட்டு கொண்டே இருந்தாள்....

தனலட்சுமிக்கு அதிர்வில் heart அட்டாக் வந்துவிட அவருக்கு மருத்துவமனையில் ஒருபுறம் ட்ரீட்மென்ட் ஒருபுறம் தந்தை இறுதி சடங்கு என அழ கூட நேரம் இல்லாமல் அலைந்து கொண்டு இருந்தான் சதா....அவனுக்கு தந்தை முகம் பார்க்க முடியவில்லை அத்தனை குற்றவுணர்வு....அவரை காப்பாற்றாமல் விட்டு விட்டேனோ என்ற எண்ணம்..அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார் என்பது அவனையும் மருத்துவரையும் தவிர இன்னும் யாருக்கும் தெரியாது..அதையும் யாருக்கும் தெரியாமல் காவல்துறை வைத்து விசாரிக்க சொல்லி கொண்டு இருந்தான்......தனக்கு திருமணம் ஆனது எல்லாம் மறந்தே விட்டது இத்தனை களேபரத்தில்...

பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்க பட...வந்த ஜனங்கள் அத்தனை பேரின் கண்ணிலும் கண்ணீர் தான்...எத்தனை குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் இன்று அந்த ஒளி அணைந்து விட்டதே....பின் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபட்டது உடல்....கணவனின் உடலை லக்ஷ்மி இறுதியாக கூட பார்க்கவில்லை...அவர் கணவனோடு சென்று விட பிரயாச பட...மருத்துவ குழு அவரை விடுவதாய் இல்லை....

எல்லாம் முடிந்து பொத்தென வந்து சோபாவில விழுந்தான் சதா.....இன்னும் இருக்கிறது பிரச்சனை என்பது போல குடும்ப வக்கீல் வந்தார்...கூடவே கட்சி தலைமை, கட்சி ஆட்கள் அனைவரும்....சச்சின் இறங்கி வர....இனி இங்கு என்ன வேலை என சதா கிளம்ப..அவர்களோ அவனிடம் தான் பேச வேண்டும் என்றனர்....

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Wo Geschichten leben. Entdecke jetzt