ஆனந்த பைரவி 6💖

496 26 6
                                    

தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருந்த பைரவி மனநிலை என்னவென்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது.....சதா அவளிடம் கரம் கொடுத்து வாழ்த்து கூறினான் புன்னகை முகத்துடன்....

அவளோ அவனை ஆராய்ச்சியாகவே நோக்கினாள்...இவன் என்ன மனிதன்??என்னதான் நினைக்கிறான்??என்னை எதற்கு முதலமைச்சர் ஆக்கினான்???யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால் இந்த வீடு தனி தீவு போல் இருந்தது....

மேலே இருந்து சச்சின் இறங்கி வந்தான்.. பைரவியை நோக்கி கையை நீட்ட அவளும் மறுக்காமல் நீட்டினாள்....வாழ்த்துக்கள் அண்ணி....

பைரவி அவனின் அழைப்பில் சங்கடமாக உணர....சதா முன் வந்தான்....எனக்காக இல்லை நான் தவறாய் நினைப்பேன் என்றோ உங்கள் நட்பை மாற்றி கொள்ளவோ பிரித்து கொள்ளவோ வேண்டாம்.... சச்சு அவள் உனக்கு அண்ணி ஆவதற்கு முன் உன் தோழி இப்போதும் அப்படியே....என கூறி வெளியே காத்து இருந்த பிரஸ் மக்களை சந்திக்க சென்றான்....

சச்சு....எனக்கும் எதும் தெரியாது....இப்படி....

வேணாம் பையு....எதையும் சொல்லாதே....முதலைச்சர் பதவி, கட்சியில் பெரிய ஆள் என ஆவது எனக்கு ரொம்ப பிடிக்கும் தான்....ஆனா சந்திரகுப்த அரசனை விட அவனுக்கு பின் நின்ற சாணக்கியனுக்கு தான் ராஜ்யங்கள் பயந்தன .....நானும் உனக்கு பின் நிற்கிறேன்....

ஓ...சைட் கேப்ல உன்னை நீயே சாணக்கியா அப்படினு சொல்ற. மாதிரி தெரியுதே??என பையு புன்னகைக்க...

அது உணமை தானே என அவனும் புன்னகைத்து சகோதரனை தேடி சென்றான்....

முன் போல் இல்லை என்றாலும் அவன் இந்த அளவு அவன் பேசியதே மனதுக்கு இன்பமாக இருந்தது....முன்னாடி போல் என்றால் இந்நேரம் ஓடி வந்து கையை கொடுத்து அவளை தூக்கி சுற்றி இருப்பான்...

பிரஸ் மக்களை சந்திக்க அவள் சென்று அமர்ந்தாள்....அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் கூறினாள்...நிச்சயம் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உறுதி அளித்தால்.....எதிர்க்கட்சிகளும்,உட்கட்சியில் சில ஆட்களும் அத்தனை வெறியிலும் கோபத்திலும் இருந்தனர்...நேற்று வந்தவள் முதலமைச்சரா????

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Donde viven las historias. Descúbrelo ahora