ஆனந்த பைரவி 22💖

418 24 4
                                    

செல்வத்தை கண்டவுடன் என்னயா இதெல்லாம் என கத்தினான் சச்சின்...உங்க வீட்டு பொண்ணை இப்படி ஃபோட்டோ எடுத்து போடுவீங்களா????

நான் சொல்றதை கேளு சச்சின்...சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லப்பா...

யோவ்..உங்க நடுவீட்ல வச்சு எடிட் பண்ணிட்டு இருக்கான்...உனக்கு தெரியாதா???இன்னும் என்ன திருட்டுதனம் எல்லாம் பண்ணுறீங்க??சொல்லி தொலைங்க..
மவனே உன்னை எல்லாம் போலீஸ்ல குடுக்கணும் டா..என தான் அடித்ததில் கீழே கிடந்தவனை மீண்டும் தூக்கி நிறுத்தி அடித்தான்....

அவனை சச்சின் அடித்து கொண்டு இருக்க..செல்வம் தன் ஆட்களுக்கு கண்ணை காட்டினார்....அங்கு உடைந்து கிடந்த கம்யூட்டரை எடுத்து சச்சின் தலையில் அடித்தான் அவன்...

தலை அப்படியே சுற்றியது...சமாளித்து நின்றவன் செல்வத்தை பார்க்க..அதற்குள் செல்வத்தின் ஆட்கள் அவனை பிடித்து கொண்டனர்....

என்னடா??30 வருஷ கனவு முதல்வர் ஆகிறது....உங்க அப்பன் கெடுத்தான், அடுத்து இடையில நீ வந்த, இப்போ எவளோ ஒருத்தி....சாகுறதுக்குள்ள அந்த சீட்ல உட்கார முடியாம போய்டுமோனு பயம் வந்துடுச்சு டா.....இனி விட மாட்டேன்...எனக்கு எதிரா வர்ற எவனா இருந்தாலும் சாவுங்க....நான் கொன்னுட்டு பலியை எல்லாம் உன் அண்ணன் மேல போடலாம்னு முயற்சி பண்ணுனா மொத்த குடும்பமும் அவன் பேரு கூட வெளிய வரவிடாமல் பண்ணிட்டீங்க....உன்னை வச்சு காய் நகர்த்தலாம்னு பார்த்தா நீ அண்ணன் அண்ணி பாசத்துல உருகிட்டு இருக்க...அதான் வேற வழியில முயற்சி பண்ணலாம்னு முடிவுக்கு வந்ததுட்டேன்....

சச்சினுக்கு கண்கள் இருட்டியபோதும் செல்வம் சொல்ல சொல்ல அங்கிருந்து தப்பி ஓட வேண்டும் என்பதே பெரிதாக இருந்தது.....

என்ன முடிவினு கேளு??
சரி நீ கேட்க வேண்டாம் ...நானே சொல்றேன்...டேய் அதை போட்டுகிட்டு வா..என தன் ஆட்களை ஏவ...
ஒருவன் உள்ளே சென்றான்..சரியாக 5 நிமிஷம் கழிச்சு வந்தவனை கண்டு சச்சின் அதிர்ந்து விழித்தான்...

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Donde viven las historias. Descúbrelo ahora