வியர்வை பூத்து இருந்த கணவனின் முகத்தையும் அவன் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளையும் வெகுநேரமாக பார்த்து கொண்டே இருந்த பைரவி எப்படியோ உறக்கத்தை தழுவினால்...
விடியற்காலை போல எழுந்த சதா முதலில் நோக்கியது கட்டிலின் ஒரு ஓரத்தில் ஒடுங்கி போய் படுத்து இருந்த பைரவயை தான்....இவள் எப்படி இங்கே??என யோசிக்கும் போதே இது தன் தாயின் வேலை என புரிந்து கொண்டான்....அவளின் தூக்கம் கலையாமல் மெல்ல எழுந்து காலை கடன் முடித்து பால்கனியில் போய் அமர்ந்தான்.....
இரவின் கனவுக்கு அவன் மனம் சென்றது....
அப்பா இறக்கும் அன்று நடந்த வெடிவிபத்து சிசிடிவி காட்சிகளை பார்வையிட சதா சச்சின் இருவரும் செல்ல தந்தையை குத்தியவன் முகம் சரியாக தெரியவில்லை ஆனால் அதன் வரிவடிவம் மிக பரிட்சய மானது போல் இருந்தது....ஆனால் யாரென தெளிவாக தெரியவில்லை...பக்காவான பிளான்...
இது தான் அவனின் கனவு....
ஆனால் இதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை...எப்பவும் கனவு என்றாலே அவனுக்கு அது பயங்கரம் தான்...இப்போ??இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள??தலையை பியிக்காத குறை....
நன்றாக விடிய....ஒரு நல்ல புடவை அணிந்து அழகாக தயாராகி நின்றாள் பைரவி....எப்போதும் போல் ஓரகண்ணில் அவளை ரசித்தாலும் அருகே செல்லாமல் தனித்து நின்றான்....
வீட்டில் அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல தனா அமைதியாக இருந்தார்..பைரவி சென்று அவர் காலில் விழ அவரால் அதற்கு மேல் அமைதி கொள்ள முடியவில்லை....தான் வளர்த்த வளர்ப்பு இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர்....கைகள் தாமாக அவள் தலையை வருடியது...அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது...எழுந்து தனஞ்செயன் படம் அருகே வந்தாள்....கரங்களை அவர் முன் கூப்பியே அவள் கண்கள் கலங்கியது....இது நீங்க இருக்க வேண்டிய இடம் மாமா...என்னை எதுக்கு தெரிந்து எடுத்திங்கனு தெரியல...ஆனா என் உயிர் இருக்கும் வரை உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்...இது சத்தியம் என மனதில் பேசியவள் சதாவுடன் கிளம்பினாள்.....
STAI LEGGENDO
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு
Mistero / Thrillerநடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???