சதாவால் தாங்கவே முடியவில்லை நார்மதாவை பார்த்தாலே கோபம் வந்தது...அங்கிருந்தால் மீண்டும் அடித்து விடுவோமோ என்ற பயத்தில் அவளை காரில் ஏற சொன்னான்...அவள் அழுது கொண்டே ஏறினாள்....
இருக்குற பிரச்சனை பத்தாதுனு இது வேற....போய் உங்க அக்கா முன்னாடி நில்லு....பெரிய உத்தம குடும்பத்தை வச்சுருக்கா...இதுல என்கூட சண்டை வேற....என்னை விட்டுட்டு அவன் கிட்ட போய் சமாதானம் ஆகுறா.....என புலம்பி கொண்டும் முறுமுறுத்து கொண்டும் வண்டியை செலுத்தினான்.....
வீட்டில் பையுவை பார்த்து கொண்டு நின்று இருந்த சச்சின் எங்கே மனம் மாறி விடுவோமோ என்ற பயத்தில் அவளை அதே அறையில் விட்டு விட்டு அவன் வெளியேறினான்...
சச்சு...சச்சு நில்லு.....என கத்தி கொண்டே சென்றாள்...
எதிரே வந்த தனா...என் புருஷனை கொன்னவங்களை கண்டு பிடிக்க சொன்னா ரெண்டு பேரும் என்ன செஞ்சு கிட்டு இருக்கிங்க??
அந்த வேலையா தான் மா இருக்கோம்...நீங்க கவலை படாம இருங்க....என சச்சு கூற...
அவர் பைரவியைப் பார்த்தார்....அத்த...என்ன ஆனாலும் சரி மாமாவை கொன்னது யாராய் இருந்தாலும் அவுங்களை விட போவது இல்லை....
நீ இன்னும் உங்க அப்பாவை பார்க்க போகலையா???
அவள் இல்லை என தலை ஆட்டினாள்...
பெரிய ஆபரேஷன் முடிஞ்சு அவரு கண்ணை திறந்து இருக்கார்...கண்டிப்பா உன்னை பார்க்க விரும்புவார்... நீ போய் முதலில் அவரை பாரு...
சரி அத்தை.....
சச்சு...
அம்மா...
நீ போய் அவளை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வா...
நானா??
ஏன்??சதா எங்கயோ வெளிய போனான்...இப்போ நீதானே இருக்க...போ...
சரிம்மா...என அவன் அவளை முறைத்து கொண்டே கிளம்பினான்...அவளும் பின்னே ஓடினாள்...அவர்கள் காருக்கு செல்ல அதற்குள் அதி வேகத்தில் வந்து நின்றது சதா கார்.....அதிலிருந்து அவன் இறங்கி வந்து அடுத்த பக்கத்தில் அமர்ந்து இருந்த நர்மதாவை இழுத்து வெளியே விட்டான்...அவன் இழுத்த வேகத்தில் கீழே விழ போனவலை சட்டென தாங்கிய பைரவி சதாவை முறைத்தாள்....
ESTÁS LEYENDO
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு
Misterio / Suspensoநடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???