அந்த அறை அமைதியாக இருந்தது....தனஞ்செயன் முன் அந்த இரண்டு அதிகாரிகளும் அமர்ந்து இருக்க...அவருக்கு பின் சச்சின் , பைரவி...
எதாவது தகவல்??
Number டிரேஸ் பண்ண முடியல சார்...ரொம்ப தெளிவா யோசிச்சு பண்ணிருக்காங்க...கொஞ்ச நாள் வெளிய எங்கேயும் போக வேண்டாம் சார்...
என்ன பேசுறீங்க?? Election வருது...ஓட்டு கேட்க போக வேணாமா??அதெல்லாம் முடியாது..
சார் உங்க அப்பா புரிஞ்சுக்க மாட்டிங்குறாரு நிலமைய என அந்த அதிகாரி சச்சினிடம் கூற...
அப்பா நான் போறேன் பா...ஓட்டு கேட்க..நீங்க கொஞ்ச நாள் வீட்டுல இருங்க என சச்சின் கெஞ்ச...
மக்கள் என்னை தான் நம்புறாங்க..நான் போகனும் சச்சு..வேணும்னா பாதுகாப்பை பல படுத்தலாம்....எனக்கு ஒன்னும் ஆகாது...என அடுத்து யாரையும் பேச விடாமல் முடித்து விட்டார்....
அனைவரும் அரைகுறை மனதுடன் காரில் ஏறினர்....போய் கொண்டு இருக்கும் போது...
பையு...என்னடா அமைதியா வர?? நீ வேணும்னா இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு போனதும் வர்றியா??அதுவரை வீட்டில் இரு.. நீயும் எதுக்கு இந்த பிரச்சனையில் மாட்டிக்குற??
என்ன மாமா??சந்தோஷத்தில் மட்டுமா எங்க அப்பா உங்க கூட இருந்தாரு??? இல்லேல??அப்போ நான் மட்டும் அப்படி இருப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்???நான் உங்க கூட தான் இருப்பேன்..எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம்...
சொல்ல போனால் இது போன்ற மிரட்டல்கள் அவரை போன்ற நல்ல அரசியல்வாதிகளுக்கு சாதாரணம் எனவு தனா இதை ஒரு பொருட்டாக எண்ணவே இல்லை...அவர் மனம் இது உண்மை ஆக இருந்தாலும் கவலை கொள்ள போவதில்லை.....அவர் அமைதியாக மனதில் தான் ஒருவேளை இறந்து விட்டாலும் செய்ய வேண்டியதை திட்ட மிட்டு கொண்டு இருந்தார்.....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
British literature என்ற தலைப்பில் அன்றைய பாடங்களை நடத்தி கொண்டு இருந்தான் சதா....அவன் வகுப்பில் மாணவர்கள் அவனை தவிர எங்கும் நோக்க மாட்டார்கள்.. தன் வார்த்தை ஜாலத்தால் கட்டி போட்டு வைத்து இருப்பான்...எப்படி பட்ட அறுவை பாடமும் சதா எடுக்கிறான் என்றால் தூக்கம் வராது....அதிலும் மாணவிகள் அவன் வருகிறான் என்றாலே வாசலையே பார்த்து இருப்பார்கள்....
ŞİMDİ OKUDUĞUN
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு
Gizem / Gerilimநடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???