ஆனந்த பைரவி 25💖

442 22 0
                                    

தன் தாயை பயம் கலந்த கேள்வியுடன் சதா நோக்க....அவரோ அவனை கண்டு மெலிதாக புன்னகைத்து போ என்றார்..

அம்மா.....

கோபம் இருக்கு... மன்னிக்க முடியாது....ஆனா அதெல்லாம் அமர் மேல....எனக்கு இப்போ தான் தெரியுது...ஆனா உங்க அப்பாவுக்கு அமர் பத்தி எல்லாம் தெரிஞ்சும்...சாகும் போது கூட எனக்கு தெரிஞ்சு அவரை கொலை செய்ய வந்தது அமர் என தெரிந்து இருக்கும்னு நினைக்குறேன்....அவர் ஒருநாளும் அந்த 3 பிள்ளைங்களையும் கை விடுறத பத்தி யோசிச்சது இல்ல...ஏன் தெரியுமா??? மத்த ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்க...ஆனா பைரவி எங்க வளர்ப்பு...... நீ சாகுறியா??இல்ல தனாவை கொன்னுட்டு நீ உயிரோட இருக்குறியானு யாராவது அவளை பார்த்து கேட்டா......அவ யோசிக்காம செத்து போவாள்.....

இப்ப கூட...அவளுக்கு என் வார்த்தையை கேட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செஞ்சு என் மருமகளா என் வீட்டுல இருக்கணும்னு தான் ஆச.....ஆனா பொறுப்பை கொடுத்தது அவ மாமா..அதான் அவ விடல...நானா அவுங்க மாமாவானு கேட்டா கூட அவ அவர் பக்கம் தான்....அவளுக்கும் அமரோடு உங்க அப்பா சாவில் பங்கு இருக்குனு இந்த உலகமே சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்....

அம்மா...என அவரை கட்டி கொண்டான் சதா.... சிரித்தவர்....எல்லாம் சுலபமா முடிஞ்சு போச்சுன்னு நினைக்குறியா??

அவன் ஆம் என தலை ஆட்ட....

மேலும் சிரித்தவர்....இதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே உனக்கு....அவ நம்ம வீட்டுக்கு வர மாட்டா.... நீ போய் அவட்ட பேச முயற்சி செஞ்சா பேச மாட்டா....

அம்மா...என்றான் அவன் அதிர்ந்து....

அவளுக்கு சுய கௌரவம் கொஞ்சம் அதிகம்....தப்பு செஞ்சது அவுங்க அப்பா...நாம என்னதான் அவகிட்ட எடுத்து சொன்னாலும் மனசுக்குள்ள அந்த குற்ற உணர்ச்சி ஆழமா பதிஞ்சு இருக்கும்......எதோ அவளே கொலை செஞ்சது மாதிரி கூட பண்ணுவா....நம்ம நம்பினாலும் நாம அவளை நம்பலனு அவ மனசு சொல்லும்...நம்மளை ஏறெடுத்து பார்க்க தவிப்பா....

இப்போ என்னமா செய்ய??

புரிய வை...உன் காதலை இன்னும் ஆழமா....அவளை முழுசும் நம்புறனு புரிய வை...சச்சின் மேல நம்பிக்கை இருக்கு அவன் புரிய வைப்பான்...உங்களை நம்புனதும் அவளை என்கிட்ட கூட்டி வாங்க....

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Donde viven las historias. Descúbrelo ahora