ஆனந்த பைரவி 11💖

480 23 8
                                    

சில கேள்விகளுக்கு பதில் இல்லை....இதுவும் அது போல் தன் ஒரு கேள்வி....good night.. என அதற்கு மேல் அவள் பேசவும் இடம் தராமல் போய் படுத்து விட்டான்....

அருகில் படுத்து இருந்தவனை பார்த்து கொண்டே உறங்காமல் இருந்தால் பைரவி.....

விடிந்து பைரவி வீட்டுக்கு புறப்பட்டனர்....நர்மதா அடம் பிடித்து சதா அருகே அமர்ந்தாள்...சின்ன பெண் தானே என விட்டு விட்டனர்... சதா முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது....

தாலி பிரிக்கும் சடங்கு அங்கேயே நடந்து முடிய...இருவரும் இப்போது பைரவி அறையில்..சிறுவயதில் அந்த அறைக்கு வந்து இருக்கிறான் அதன் பின் வந்தது இல்லை...அவனை வரவேற்றது அவன் சச்சு பைரவி இருக்கும் புகைப்படம் தான்...அதை கண்டதும் மெல்லிய புன்னகை தாமாக படற உள்ளே நுழைந்தான்....தாயின் வற்புறுத்தல் பேரில் அவனுக்கு காஃபி எடுத்து வந்து இருந்தாள் பைரவி...

புருவம் உயர்தியவன்....இந்த டிப்பிகள் மனைவியாக எப்போ இருந்து மாற ஆரம்பிச்ச??

அம்மா தான் குடுத்து விட்டாங்க..கண்ட நேரத்துல நீ குடிக்க மாட்டனு சொன்னா எங்க கேக்குறாங்க...என பாரமாக இருந்த நகைகளை கழற்றி வைக்க ஆரம்பித்தாள்....கண்களுக்கு முன் அவளை வெறுப்பதாக காட்டினாலும் மனதில் இருக்கும் ஆசைகளை ஒருபோதும் அவனால் அடக்க முடிந்ததே இல்லை...இன்றும் அதே போல் தான்..அந்த மஞ்சள் நிற சேலையில் அதற்கு ஏற்ற ஆபரணகள் அணிந்து அழகு பதுமையாக அருகே வந்து அமர்ந்தவளைவிட்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை...அவள் என்னவென்று வினவவும் தான் நிதானத்துக்கு வந்து வேறு புறம் திரும்பினான்...

அவளை அவன் ரசிக்குறான் என்பது அவளுக்கும் தெரிந்தது சில நேரங்களில் அவன் பார்வை அவள் கன்னங்களில் செம்மை பூசவும் வைக்கும்...ஆனால் ஒரே நிமிடத்தில் இவனா தின்பது போல் பார்த்தான் கனவு எதும் கண்டோமோ என நினைக்கும் அளவு கல்லாக மாறி விடும்....இன்றும் அவன் பார்க்கிறான் என தெரிந்தும் திரும்பவில்லை பின்னே திரும்பினாள் முறைக்க ஆரம்பித்து விடுவான்..அதை யார் சகிப்பது???

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Where stories live. Discover now