ஆனந்த பைரவி 13💖

429 21 8
                                    

அதிர்ச்சியை தாண்டி பைரவி கத்த தூக்கத்தில் இருந்த கோதை விழித்து கொள்ள காவலர்களும் ஓடிவந்தனர்....

உள்ளே உள்ளே என அவள் பதட்டத்தில் கை காட்ட...உள்ளே ஓடினர்...

உள்ளே யாரும் இல்லை...அமர் மயக்கத்தில் இருந்தார்...

வெளியே வந்த காவலர்கள்...உள்ளே யாரும் இல்லையே மேடம்??ஏன் கத்தினீங்க???

அவள் உள்ளே ஓடினாள்...அறை முழுக்க அலச அங்கு யாருமே இல்லை...இது எப்படி. சாத்தியம்??கண்ணை திறந்து கொண்டே அதுவும் பட்டபகலில் கனவு கண்டேனா????இல்லமா நான் பார்த்தேன்.. நம்பு மா..என அவள் தாயை கெஞ்ச...

சரி மா யாரை பார்த்த??என்ன பார்த்த???

நான் சதாவை பார்த்தேன் மா...அவரு அவரு உள்ளே போனாரு மா...

மாப்பிள்ளை நைட் தலைவலினு
சொல்லி வீட்டுக்கு போனார் மா..அதோட இப்போ அவர் உள்ளே போனால் என்ன??வந்தது மாப்பிள்ளை தானே??அதற்கு ஏன் கத்தினாய்???

இல்லமா...அது...அவள் திணற...

இங்க வா என அவளை வெளியே அழைத்து கார் டிரைவரை வர சொன்னார்...பாப்பாவை வீட்டில் இறக்கி விடுங்க அண்ணா தூக்கம் இல்லாம அவளுக்கு ஒரு மாதிரி இருக்கு போல...என அவள் மறுக்க மறுக்க அவளை அனுப்பி வைத்தார்...

வீடு வந்தவள் நேரே சென்றது அவள் அறைக்கு தான்...அங்கு சதா நல்ல உறக்கத்தில் இருந்தான்...தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்..அப்போது தான் அவளுக்கு தனஞ்செயனை கொன்றது கூட சதா போல் உள்ள ஒருவன் தான் என....ஆனால் அவனுக்கு என் அப்பா அறையில் என்ன வேலை???அவன் அங்க எதும் செய்யவும் இல்லையே???அப்பா நல்லா தானே இருந்தாரு????கடவுளே???

விடிந்தும் வெகுநேரம் கழித்தே எழுந்தான் சதா...அமர்ந்து கொண்டே தூங்கி கொண்டு இருந்தவளை கண்டவன் அவள் தூக்கம் களையாமல் அவளை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தான் .படுக்க வைத்து விட்டு அவன் திரும்ப அவன் கையை பிடித்து நிறுத்தினாள்....

என்ன???

அவள் நடந்த அனைத்தையும் கூறினாள்... சதா ரொம்ப பயமா இருக்கு...யாரோ வேணும்னே செய்றாங்க....அவுங்க எதுக்கு நம்ம குடும்பத்தை கொல்ல பார்க்கணும்??

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Where stories live. Discover now