பைரவி யோசனையுடன் சுற்றி கொண்டு இருந்தாள்....
ஹோய்...என்றபடி வந்தான் சச்சின்..
என்ன ஆச்சு??? ஏன் இந்த யோசனை??ஒன்னும் இல்ல சச்சு....மாமாவை பற்றி தான்...
அப்பாவோட சேப்டி இப்போ 100% போட்டாச்சு...இனிமே எவனும் அவரை தொட முடியாது...அப்பாவுக்கு ஒண்ணுமே ஆகாது..பயப்படாத டா..என கூற .அவள் அவன் தோள் மேல் சாய்ந்தாள்.....
அவள் கண்ணில் சதா அறைக்கு செல்லும் தனலட்சுமி தான் பட்டார் ...
மகனின் அறை கதவை தட்டி உள்ளே சென்றார் லட்சுமி...
அம்மா...
ஆனு மா இப்போலாம் நீ எங்க யார் கிட்டயும் சரியா பேசுரதே இல்ல....எதாவது பிரச்சனையா???
ஐயோ அதெல்லாம் எதுவும் இல்ல மா..காலேஜ்ல செமஸ்டர் வருது..அதான் preparation போது கொஞ்சம் பிசி...
சரி..என அவன் அருகே அமர்ந்தார்...அப்பா சச்சுவுக்கும் பையுவுக்கும் ஒரு சின்ன நிச்சயம் பண்ணிடலாம்னு நினைக்கிறார்...ஆனா கல்யாணம் உனக்கு பொண்ணு பார்த்த பிறகு தான்... நீ என்ன சொல்ற??
அம்மா என் கல்யாணத்துக்கு ஒன்னும் அவசரம் இல்ல அதெல்லாம் பொறுமையா தான் பண்ணனும்..எனக்காக அவுங்களை காத்திருக்க வைக்க வேணாம்...நீங்க நாளைக்கு நிச்சயத்தில் முகுர்த்த தேதியும் குறிங்க...
இல்ல தம்பி .....மூத்தவன் நீ இருக்கும் போது...
அம்மா...அதுக்காக எனக்கு அவசர அவசரமாக பொண்ணு பார்க்க முடியுமா??அது வேணாம் மா....அவன் கல்யாணம் முடியட்டும்.... இதுல என்னம்மா மூத்தவன் சின்னவன் எல்லாம்...
அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் கணவனிடம் பேச சென்றார்....அவரும் சரி என சொல்ல..நிச்சயம் ரொம்ப சின்னதாக குடும்ப நபர்களை மட்டும் வைத்து மறுநாளே செய்யலாம் என முடிவெடுக்க பட்டது....
இங்கு சதா கல்யாண தேதி அன்று என்ன சொல்லி வெளியே செல்லலாம் என யோசித்து கொண்டு இருந்தான்....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இரவெல்லாம் நடந்து கொண்டு இருந்தவனுக்கு தன்னையும் மீறி உறக்கம் வர படுக்கையில் சாய்ந்தவன் அப்படியே உறங்கி போனான்....
கனவில்.....
STAI LEGGENDO
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு
Mistero / Thrillerநடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???