தன் முன் நீட்ட பட்ட ரோஜாவையும் அதை நீட்டும் கரங்களுக்கு சொந்தக்காரியான நர்மதாவையும் முறைத்து கொண்டு இருந்தான் சதா....
என்ன நினைச்சுட்டு இருக்க நர்மதா???அவன் குரலில் கோபம் எட்டி பார்க்க...
இதுல என்ன மாமா தப்பு...உங்க தம்பி எங்க அக்காவை காதலிக்கிறார் நான் உங்களை காதலிக்கிறேன்..
உன் வயசு என்ன??இதெல்லாம் எங்க இருந்து கத்து கிட்ட??அவன் குரல் உயர்த்த...
நர்மதா கண்கள் கலங்கி விட்டது..மாமா நான் நிஜமாவே உங்களை காதலிக்கிறேன்....எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்....
அவனுக்கு என்ன சொல்லி அவளை சமாளிக்க என தெரியவில்லை...சிறு பெண் பருவ கோளாறு தான் அதை சொன்னால் ஏற்று கொள்ள மாட்டாள்...பொறுமையாக இதை டீல் செய்ய வேண்டும்...என்ற முடிவுக்கு வந்தான்....
சரி....இப்போ தான் நீ படிக்குற...முதல்ல படிச்சு முடி. அப்புறமும் உனக்கு என் மேல காதல் இருந்தா பார்க்கலாம்...அதுக்கு முன்னாடி உன் அக்கா கல்யாணம் நல்ல படியா முடியட்டும்....என எதோ சொல்லி அவளை அனுப்பினான்....
அவளை அனுப்பியதும் பின்னால் பைரவி நின்று கொண்டு இருந்தாள்....அவளை கண்டும் காணாமல் செல்ல போக...
இப்போ என் தங்கச்சிக்கு நீ ஏன் பொய்யான நம்பிக்கை கொடுத்த ஆனு???இதெல்லாம் ஒத்து வராதுனு சொல்லி இருக்கலாமே அவ கொஞ்ச நாள் அழுவா அப்புறம் சரி ஆகிடுவாலே??
ஒருவேளை தவறான முடிவு எடுத்தா???இந்த காலத்துல எந்த பொண்ணு சொல்றதை கேட்குது??ரொம்ப கம்பெல் பண்ணுனா மருந்தை குடிச்சா என்ன செய்ய???இவுங்களை எல்லாம் அவுங்க வழியில போய் தான் திருத்தனும்....நான் ஒரு வாத்தியார் யாரிடம் எப்படி நடக்கனும்னு எனக்கு தெரியும்...என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டு கிளம்பினான்.....
அன்று தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் காலையிலேயே அவனுடன் வம்பு வேண்டாம் என பைரவியும் கிளம்பினாள்.....அன்று முதல் இனி எப்போதும் அவள் வாழ்வில் புயல் மட்டும் தான் வீச போகிறது என்பதை அறியாமல் போனாள்...
BINABASA MO ANG
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு
Mystery / Thrillerநடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???