" முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஒரு பாரம்"
Lyrics: நா.முத்துக்குமார்.
திருமண நாள் அன்று யாராரோ என்னென்னவோ என்னிடம் சொன்னார்கள், அது எதுவும் என்னை இப்போது கைபிடித்த கணவன் சொன்ன வார்த்தைகள் போல இல்லை, எந்த கணவனும் அவன் மனைவியிடம் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்கவும் வாய்ப்பு இல்லை,
"listen யாசின் நான் உன்னை பிடிச்சதுனால இந்த கல்யாணம் பண்ணல, எனக்கும் உனக்கு இதை தவர வேறு வழி இல்லன்னு தெரிஞ்சி தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குட்டேன், mostly என் குடும்பத்தை என்னால இதுக்குமேல upset பண்ண முடியாது அதனால தான் பண்ணேன், நம்ம ரெண்டு பேருக்கும் future இருக்குன்னு just எப்பவும் யோசிச்சிடாத, இப்போ உன்னால உன் வீட்டுக்கோ இல்ல வேர எங்கேயும் போய் இருக்கவோ முடியாதுன்னு எனக்கு தெரியும், just be clear நீ படிச்சி உனக்கு வேலை கிடக்கிற வரைக்கும் தாராளமா என்கூட என் அப்பார்ட்மெண்ட்ல இருக்கலாம், but that's all நமக்குள்ள வேரா எதுவும் இருக்க போறதில்லை"
அவன் சொன்னது என்னவோ உண்மைதான், அவன விட்டா நான் போய் வாசிப்பதற்கு எனக்கு வேற எந்த இடமும் கிடையாது,
என் அப்பா அம்மா என்னை தத்து எடுத்ததில் இருந்து இதுவரை நிறைய உதவி செய்துவிட்டார்கள்,
நான் எப்போ வீட்டை விட்டு போவேன் என்று கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் தவித்த தவிப்பை எல்லாம் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன், என் தங்கை என்னுடன் பேசினால் கேட்டு போய் விடுவாள் என்று அவளை என் கூட தனியா பேச கூட விடாமல் மிக கவனமாக பாத்த்துக்கொள்ளும் அளவுக்கு நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்,
இல்லாமல் எதற்கு என்னை இவ்வளவு நாள் வைத்து வழத்த என் பெற்றோர் திடீரென்று என்னை வெறுக்க போகிறார்கள் ? நிச்சயம் என் தப்பகத்தான் இருக்கும்,
ஆனால் நான் எதுவுமே தெரிந்து செய்யவில்லையே,
tour ல் தொலைந்து போனது என் தப்பாக இருக்குமோ? ஆனால் எனக்கு முன்பே தொலைந்து போக போகிறேன் என்று தெரிந்து இருந்தால் நான் நிச்சயம் அந்த பக்கம் போய் இருக்க மாட்டேன்,
YOU ARE READING
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?