நானே வருகிறேன்...
கேளாமல் தருகிறேன்...
கண் தீண்டி உறைகிறேன்...
கைத் தீண்டி கரைகிறேன்..
நினைவுகளை மறக்கிறேன்...
நிகழ் கணமும் மறக்கிறேன்...
இடம் பொருளை மறக்கிறேன் ...
எது எனது மறக்கிறேன்...லிரிக்: வைரமுத்து.
“எல்லாம் என்னால தான் என்னால தான் அவன் மழைக்குள்ள அலைஞ்சான்… atleast தலையையாவது ஒழுங்கா துவட்டி விட்டு இருக்கலாம்….ஏன் யாஸீன் இப்புடி சோதப்புற....."
என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டு கை பேசியை எடுத்து என் தோழியை அழைத்து அன்று கல்லூரி வரப்போவதில்லை என்ற தகவலை சொல்லி விட்டு குளிரில் நடுங்கிய அவனை என் அறையில் இருந்த இன்னொரு போர்வையை அவனுக்கு போர்த்தி விட்டு விட்டு….
அவனுக்கு எனக்கு தெரிந்த அந்த பிரேட் ஆம்லெடை தயார் செய்து உணவையும் தண்ணீரையும் ட்ரேயில் வைத்து மீண்டும் அவன் அரைக்கு சென்று எழுப்பிட முதலில் எழுந்து என்னை குழப்பமான பார்த்தவன் பிறகு உணவை கண்டதும் எழுந்து பழைய காட்டு வாசி பாணியில் சாப்பிட ஆரம்பித்து விட்டான் அவன் அதை முடித்ததும் நான் மாத்திரைகளை நீட்டியவாறு,
“இல்லை தெரியாமல் தான் கேக்குறேன் கார் எடுத்துட்டு போகும்போது எப்படி நனைஞ்ச?” என்று நான் கேட்க்க அவனோ தண்ணியை குடித்து விட்டு,
“பரவா இல்லை இப்பல்லாம் பிரேட் ஆம்லெட் நல்ல பண்ண கத்துகிட்ட” என்று நான் கேட்க்கும் கேள்விக்கு பதில் கூறாமல் வேறெதோ ஒன்றை கூற நான் அவனை முறைத்தேன்,
இதை கண்ட அவனோ முதலில் குழப்பத்தில் இருந்தவனோ அப்போது தான் ஏதோ ஞாபகம் வந்தது போல் கண்களில் கோபத்துடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்,
“எல்லாம் உன் தப்பு தான் நீ உன் boyfriend கூட இருக்கேன்னு சொல்லி இருந்தா நான் மழைக்குள்ள அலைந்து இருக்க வேண்டிய தேவையே வந்து இருக்காது…” என்று அவன் மீண்டும் எனக்கு பிடிக்காத அந்த b வார்த்தையை உபயோக படுத்த எனக்கு மீண்டும் கோபம் வந்தது.
ESTÁS LEYENDO
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?