இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே...
லிரிக்: தாமரை.
அன்று நேரம் 10 மணி இருக்கும்,
நேற்று கூறியதுபோல் இன்றும் என் கணவன் மதிய உணவிற்கு வீட்டிற்க்கு வர போவதில்லை என்ற அந்த தகவலை சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான்,
நான் என் திருமண வாழ்கையை பற்றி வியந்தவளாக பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தேன்,
கடந்த வாரங்களில் ஊரில் சொந்தங்களுடன் இருந்ததால் ஒன்று தெரியவில்லை,
ஆனால் இப்போது தனியாக வீட்டிற்குள் யாரும் இல்லாமல் இருப்பது வெறுமையாக உள்ளது,
நானும் நேற்றே வீட்டில் உள்ள மூலை முடுக்கை எல்லாம் சுத்தம் செய்துவிட்டேன் இனி செய்வதற்கு எதுவும் இல்லை,
எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சிக்குள் தலையை விட்ட வாறு இருப்பது,
தோழிகளும் அவரவர்கள் கணவர் குழந்தை வேலைகள் என பரபரப்பாக இருக்க அவர்களை தொந்தரவு செய்யவும் எனக்கு மனமில்லை,
தோழியின் குழந்தையை பாக்க ஆசையாக இருந்தாலும் அங்கு அவளை போய் விடுவதற்கு ஆளில்லை-
என்று அவள் எண்ணத்திற்கிடையில் அவள் கைபேசி் ஒலிக்க அவள் அதை எடுத்து காதிலே வைத்து
"ஹல்-" என்று அவள் முடிப்பதற்குள்,
"யாசின் எப்படி இருக்க? எங்க இருக்க? நீ இங்க பெங்களூர் வந்துட்டேன்னு சொன்னங்க? ஒரு கால் பண்ண மாட்டியா? கல்யாணம் முடிஞ்ச உடனே friends எல்லாம் அவ்ளோவு தானா?" என்று அவள் தோழி அவள் முதல் வார்த்தை பேசி முடிக்கும் முன் அவள் மூச்சு விடாமல் பேச,
அவள் ஒரு பெருமூச்சுடன்,
"பேசி முடிச்சிட்டியா? நேத்து தான் ஊருக்கு வந்து சேர்த்தேன், நீ வேற குழந்த husband னு busya இருப்ப எதுக்கு disturb பண்ணனுதான்"
ESTÁS LEYENDO
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?