கடல் அலை போல காலொட உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி...
கடல் மண்ணை போல உன் காலொட ஒட்டி கரை தாண்டும் வரையில் நான் இருப்பேனடி...லிரிக்: விக்னேஷ் சிவன்.
நான் எழுந்து வெளியில் வந்து கிட்ட தட்ட 5 நிஷம் ஆயிடுச்சு அவன் இன்னும் வெளியில் வரவில்லை....
நேரம் ஆக ஆக எனக்கு உள்ளபோய் என்ன நடக்குதுன்னு பாக்கணுங்குற எண்ணம் அதிகமாகிக்கொண்டே இருக்கு...
இவள் எதுக்கு இப்போ வரணும்???
இப்போ தான் கொஞ்சம் நாளாக அவன் என் கூட மனுஷன் மாதிரி பேச ஆரம்பிச்சு இருக்கான் அது குள்ள இவள் வேறு...
இவ்வளவு நாளாக கண்ணுக்கு தெரியாத அவன் இப்போது மட்டும் அவள் கண்ணுக்கு பட்டானாமா?
Uhh...i hate her sooo much...
அவள் ஏன் அழகா இருக்கா? அவள் என் அவனை காயப்படுத்தினால்? ஏமாற்றினால்?
அவன் ஏன் இன்னும் முழுசா அவளை மறக்காம இருக்கான்?
இப்போ இதுக்கு அவனை தேடி வந்தால்...இன்னும் எதுக்கு அவனுக்கு அவள் மேல் உள்ள அக்கறை குறையல?
ஏகப்பட்ட காரணங்களும் கேள்விகளும் என் மூளையை துளைத்துக் கொண்டு இருக்கு...இத்துடன் சேர்த்து அவன் மீது இருக்கும் அந்த அரைகுறை கோபம் வேறு...
நேற்று அவன் மேல் கோபமாய் தானே இருந்தேன் சட்டப்படி அவனுடன் பேசாமல் தானே இருந்து இருக்கணும்...
ஆனால் அவன் அருகில் அவன் மீது இழுத்துக் கொண்டதும் அப்படி ஒரு கோபம் இருந்ததையே மறந்து போனேன்...
இன்று காலை மீண்டும் அவள் வாயை திறந்து அதையெல்லாம் திரும்ப கொண்டு வந்து விட்டாள்...
எனக்கு தெரியும் எனக்கு தெரியும் நான் கொஞ்சம் ஆவரேஜ் லூகிங் தான்னு...
அவனுக்கு அவ்வளவு மேட்ச் இல்ல தான்னு...
அப்புறம் நான் ஒன்னும் எல்லோரும் விரும்புற போல ஐடியல் வைஃப் இல்லைன்னும் எனக்கு தெரியும்...
YOU ARE READING
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?