நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்,நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்...
லிரிக்: மதன் கார்கி.
ஒருவழியாக ஒரு டாக்ஸி வழியில்
வந்ததால் என் கால்கள் தப்பித்தது,பிறகு பேருந்து நிலையத்தில் திக்கித்தினரி விசாரித்து கேட்டதில், நான் போகவிருக்கும் பஸ் காலை 7 மணிக்கு தான் என்று சொல்லியவுடன் இருவருக்கும் சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியவில்லை,
சிறிதுநேரம் அவன் பஸ் ஸ்டாப்பிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்த அவன்,
திடீரென்று யோசனை வந்ததுபோல் என்னை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் இவன் எங்கு தான் போகிறான் என்று பார்த்தால் கடைசியாக பஸ்டாப்பிற்கு பின்னால் இருக்கும் ஹாஸ்பிடலிற்குள் கூட்டி செல்கிறான்,
நானும் பேசாமல் பின்னால் நடக்க, என்னை அங்கிருந்த நாற்காலியில் அமர செய்து விட்டு அங்கிருந்த நர்ஸ் ஒருவரிடம் சென்று பட்டனை தட்டியதுபோல் முகத்தில் ஒரு வித்தியாசமான சிரிப்பை ஒன்றை மாட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தான்,
'அடப்பாவி...இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரிஞ்சு இருக்கு'
அந்த நர்ஸும் பதிலுக்கு பேச ஆரம்பித்தாள் ஒரு 10 நிமிடம் இருக்கும் அந்த நர்ஸ் ஒரு சாவியை கொடுக்க அவன் முகத்தில் வெற்றி சிரிப்புடன் என் முன் வந்து நின்று, "வா போகலாம்" என்றான்.
"night தங்குறதுக்கு இடம் கிடைச்சிடுச்சி" என்றவன் முகத்தில் வெற்றி சிரிப்புடன் என்னை முதல் மாடிக்கு இழுத்து சென்றவன் அங்கு உள்ள ஒரு ரூமை ஓபன் செய்து என்னை உள்ளே போக சொன்னான்,
"எப்படிடா இப்படியெல்லாம்? இதெல்லாம் allowed டா? எப்படி அந்த பொண்ணு ஒத்துக்குகிச்சு?" என்று நான் கேட்க்க,
YOU ARE READING
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?