என் விழியின் கனவு -14

5.3K 159 11
                                    

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர் நான் ஏந்த முயழ்கிறேன்...
உன் சோகம் என்னெஞ்சில் ஏந்திப் போகிறேன் அது என்னடா?..
நான் ஏன் நீ ஆகிறேன்...

லிரிக்: மதன் கார்க்கி.

ான் அவனோட p.a ஆகி ஒரு வாரம் ஆகுது...இவ்வளவு நாளாக அவனை பற்றி தெரிந்து கொண்டதை விட இந்த 1 வாரத்தில் தெரிந்து கொண்டது தான் அதிகம் அதிலும் இவ்வளவு நாள் நான் அவனை திட்டியதை விடவும் இந்த ஒரு வாரத்தில் தான் அதிகம் திட்டி இருப்பேன்…

ஆனால் இந்த வெறுத்தளில் ஏதோ ஒரு இடத்தில் எங்கோ அவனின் கடின உழைப்பையும் நேர்மையையும் காண தொடங்கி விட்டேன்

அதன் பின் இந்த திட்டுவதும் குறைந்து போய் மீண்டும் என் மூலை தன்னிசையாக அவனின் இன்னொரு புரத்தையும் ரசிக்க ஆரம்பித்து விட்டது…

‘i mean why...why in the hell i have to admire him all the time...and fell for him deeper and deeper… அவனுக்கு என்னை பிடிக்க கூட செய்யாது...அப்ப எதுக்கு எனக்கு மட்டும் இப்படி ஆகுது...it’s annoying…

ஒரு சில நேரத்தில் இப்படி அவன் பாறை போல் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பதை பார்த்து பொறாமை கூட வருகிறது எனக்கு…

சட்டப் படி அவன் இப்படி இருப்பதை பார்த்து ஒரு நல்ல மனிதராக இருந்தால் என்ன தோன்ற வேண்டும்…’அய்யோ இந்த பையன் எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கான்.. எப்பவும் இப்படி feeling இல்லாத கான்க்ரேட சுவரு மாதிரி நிக்கிறானேன்னு’ தோணனுள்ள அது தானே சாதாரண மனித இயல்பாக இருக்கும்…

ஆனால் எனக்கு என்ன தெரியுமா தோணுது..இவன் இப்படி  செமெண்ட் தரையாக இருக்குறனால தானே எந்த feelingகும் இல்லாமல் திரிகிறான் நானும் அந்த மாதிரி இருந்து விட்டால் நானும் எதை பற்றியும் கவலை பட தேவை இல்லல்ல…

அவனுக்கு என்னை பிடிக்குமா? இல்லை என்னைக்காவது என் ஞாபகம் வருமா? அப்படி இல்லை என்றால் அவன் திரும்பவும் அந்த கும்தாஜை தேடி போய்டுவானா?

இன்னும் கொஞ்சம் நாளில் அவன் என்னை வீட்டை விட்டு போக சொல்லி விட்டால் இப்போ அதை நினைக்கும்போது வலிப்பது போல தான் அப்போதும் வலிக்குமா இல்லை கம்மியா வலிக்குமா…

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora