"மனசு வாசனை வீசுந் திசையில
உன்னத் தேடி ஓடுனேன்
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன் "லிரிக் : விவேக்.
"don't give up buddy, அவன்
உண்மையிலேயே உன்ன விரற்றதுக்காக சொல்லி இருந்தான்னா உன் கிட்ட முழு கதையை சொல்லி இருக்க சான்ஸ் இல்ல, அவன் சொன்ன கதையில் ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருப்பான் யோசித்து பாரு" என்றாள் அவள்,எனக்கோ அவ்வளவு தகவல்களையும் தலையில் போட்டுக் கொண்டதால் இன்னும் தலை வழி தான் அதிகமானது.
எனவே நான் அதை பற்றி யோசிப்பதை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டு என் முன் தோன்றி மறையும் தண்ணீர் குமிழிகளை பார்த்துக்கொண்டு தூரத்தில் கேட்க்கும் ஏதோ ஒரு குழந்தையின் சிரிப்பொலியை கவனித்த வாறு அமர்ந்திருக்க என் மனம் அமைதியாக தொடங்கியது.
என் தோழி என் கையில் வந்து அந்த சூடான ஸ்வீட் கார்னை திணிக்கும் வரை என் மனம் அங்கிருந்த நீர் போல அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது பிறகு இருவரும் சம்மந்தமே இல்லாமல் அங்கிருக்கும் ஒவ்வருக்கும் நாங்களாக ஒரு கதை சொல்லி சிரிக்க ஆரம்பித்து விட்டோம்...
"ஏய் அங்க இருக்குரங்க பாரு அந்த couple அந்த பையன பாத்தா ஸ்கூல் கட் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கு ஆனால் அந்தம்மா.... எப்படியும் 35 இருக்கும்-- கண்டிப்பா தள்ளிட்டு தான் வந்திருப்பான்" என்றாள் ஹரினி
எனக்கோ என்னதான் அவள் கூறுவது சரி தானோ என்று தோன்றினாலும் தெரியாத ஒரு ஆளை அப்படி குறை கூறுவதற்கு என் மனம் கேட்கவில்லை..
"hey ஏன் அப்படி சொல்லரே maybe அவங்க brother sisterஅ இருக்கலாம் ஏன் அவனுக்கு அம்மாவா கூட இருக்கலாமே" என்று நான் கூற
அவளோ நீ ஒரு குழந்தை என்பது போல் என்னை பார்த்து என் தலையை தட்டிவிட்டு..
"நீ இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கு ரான்...எந்த அம்மா அவள் பையன் கைய விடாம பிடிச்சிகுட்டு--4 வயசு பையன் கைய்யா பிடிச்சுக்கிட்டு இருந்தா பரவா இல்லை அவன் தொலைஞ்சி போய்டுவான்னு பண்ணுராங்கன்னு சொல்லலாம்--- அப்பறம் அந்தம்மா அவனுக்கு விடற looku....கண்டிப்பா ஏதோ affair case தான்" என்று அவள் கூற
KAMU SEDANG MEMBACA
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romansaபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?