உன் விழிகளில் -10

4.8K 168 41
                                    

"தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே நானுனை பார்க்கிறேன் அன்பே...
சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கு அது தெரிந்ததா அன்பே.."

லிரிக்: நா. முத்துக்குமார்.

நேற்று ஏதோ அவன் கட்டிப் பிடித்ததனால் அவனுக்கு இந்த காதல் பாசம் இதெல்லாம் என் மேல் வந்துட்டதாக நீங்க நினைக்கலாம் தப்பில்லை நான் கூட கொஞ்சம் நேரம் அப்படி தான் நினைத்து கனவில் மிதந்து கொண்டு இருந்தேன்,

ஆனால் அவன் அடுத்த ரெண்டு நிமிஷத்தில் அவன் சுய நினைவுக்கு வந்த பிறகு அதே கல்லால் செதுக்கிய வெற்று முகத்தோடு ' i am sorry' என்று சொல்லி விட்டு அவன் அறைக்குள் புகுந்து போது அது எல்லாம் என் கனவில் தான் நடக்க முடியும் என்று எனக்கு தெளிவானது,

அவள் அவனை எப்போதோ உடைத்து நாசம் செய்து விட்டாள்... எனக்கு அவனை மீண்டும் ஒன்றாக்க வழி தெரியவில்லை,

இல்லை அவனை எப்போதாவது ஒரு நாள் ஒன்றாகிவிட முடியுமா என்று கூட புரியவில்லை...

இப்படி இருபவனுக்காக நான் இன்னும் ஆழமாய் விழுந்து கொண்டிருப்பதில் எனக்கு பயம் இருந்தாலும் என் மனம் என்னவோ அதை நிறுத்துவது போல் இல்லை...

சூழ்நிலைகள் இப்படி இருந்தும் அவன் கைகளுக்குள் இருந்த ஒரு சில நிமிடகளை என் மனது மீள்சுழலாக்கி காட்டுவதை நிறுத்துவதாகவும் இல்லை...

"நான் சொல்லரத கேட்டுக்கொண்டு இருக்கியா இல்லையா என் அக்கா கிட்ட உங்க வீட்ல நிறைய கஷ்டம் உன் அப்பாக்கு பக்க வாதம் அம்மாக்கு பைல்ஸ்னு என்ன என்னவோ கதைவிட்டு என் அக்கவ உனக்கு recommand பண்ண ஒத்துக்க வச்சிருக்கேன் எதையும் சொதப்பிடாத" என்று என் தோழி நாங்கள் நேற்று சந்தித்த அதே ஆபிசில் எதிரே உள்ள கஃபேயில் அமர்திருக்க என்னை எச்சரித்துக்கொண்டு இருந்தாலும் நான் அந்த black forestலிருந்து கண்ணை எடுத்து அப்போது தான் என் தோழியின் கண்களை கண்டேன்,

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Where stories live. Discover now