விடிகின்ற பொழுது - 6

4.4K 153 14
                                    

காட்டு தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எரியுதடா,
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி கதருதடா...

லிரிக்: சினேகன்.


"அதான் கவலை பட நீ இருக்கியே guardian angel" என்று சொன்ன பிறகுதான் அது எவ்வளவு உண்மை என்றதை அதிர்ச்சியுடன் உணர்தேன்.......

"என்னால யாருக்கும் angel அ இருக்க முடியாது யாசீன், restorent ல என்ன பத்தி வருட கணக்கில் தெரிஞ்ச ஒருத்தி என்னை பற்றி என்ன சொல்லிட்டு போனான்னு யோசித்து பாரு, அவள் சொன்னது எதுவும் பொய் இல்ல நானே சொல்லறேன்,இது உன் life... உனக்கு நீயே தான் கவலை படனும், இதை இப்ப மட்டும் இல்ல உன் life long ஞாபகம் வச்சிக்கோ" என்று அவன் படக்கென்று என் எண்ணம் செல்லும் பாதையை அடைத்து விட்டான்,

எனக்கு வெகு நேரம் என்ன சொல்வதென்று தெரியவில்லை கடேசியாக கை கழுவும் முன்,

"ஆனால் ரிஸ்வான் என் lifeல இதுவரை நான் கற்றுக்கொண்ட ஒரே பாடம் நீயா ஒரு விஷயத்த பாக்குற வரைக்கும் யாரு என்ன சொன்னாலும நம்ப கூடாதுங்குறது தான், நான் அதை அவ்வளவு சீக்கிரம் கை விடறதா இல்லை sorry" என்று நான் சொல்ல அவன் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை

நாங்கள் இருவரும் டாக்ஸி இல்லாதால் டாக்ஸியை பார்க்கும் வரை கால் போன பாதையில் அமைதியில் நடந்து கொண்டு இருந்தோம்,

அப்போது தான் அவன் என்னுடன் இல்லா விட்டால் இந்நேரம் நான் எவ்வளவு ஆடி போய் இருப்பேன் என்று ஒரு எண்ணம் வந்தது அத்துடன் பயமும் வர நான் கொஞ்சம் நகர்ந்து அவன் அருகில் வந்து நடக்க ஆரம்பித்தேன்,

அவன் பேச ஆரம்பித்தான்,

"நான் first பார்த்தப்ப ஏன் அவ்ளோவ் make up போட்டு இருந்தே?" என்று பேசுவதற்கு ஏதும் இல்லாமல் கேட்க்க,

"அதான் இப்போ பார்க்குறியே இன்னுமா காரணம் தெரியல?" என்று நான் ஒரு பெருமூச்சுடன் கேட்க,

"என்ன தெரியணும்?" என்று அவன் உண்மையிலேயே குழப்பத்தில் இருப்பது போல் கேட்டான்,

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Where stories live. Discover now