காதல் கிரிக்கெட்டு - 11

4.8K 167 31
                                    

தலைக்கு மேல கோபம் வருது ஆனாலும் வெளி காட்டலையே...
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலையே...

லிரிக்: ஹிப் ஹாப் தமிழா.

கடவுளே எப்படியாவது என்னை காப்பாத்திடு என்றவாறு நான் கண்களை திறக்க அது நேராக பார்த்ததோ எனக்கு மிகவும் பழக்கப்பட்ட எப்போது குறையாத கோபத்துடன் இருந்த அந்த கேரமல் நிற கண்களை தான்...

அய்யோ மாட்டுனேன் மாட்டுனேன் இன்னைக்கு நான் மர்கயா தான் சும்மா பேசுனாலே டிவோர்ஸ் கேப்பான் இப்போ நான் பன்னதெல்லாம் தெரிஞ்சா வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினாலும் பூட்டிடுவான்....

அதைவிட மோசமா.....என்னை வீட்டுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வச்சிட்டானா??? ஐயோ நான் என்ன பண்ண? ஏதாவது யோசி யாஸீன்...

ஆனால் நான் யோசித்து முடிப்பதற்கு முன்னாள் அவனே என் முன்னால் வந்து நின்று "இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?" என்று சந்தேக கண்ணுடன் கேட்க்க என் தலையில சக்கரம் சுற்றியவாறு தான் இருக்கிறது இன்னும் பதில் மட்டும் வரவில்லை...

"அ..அது-"என்று நான் திக்கி திணற..

அதற்கு முன் அவன் அடுத்தடுத்து கேள்விகளை கேட்க்க தொடங்கினான்,

"உனக்கு எப்படி என் ஆஃபீஸ் இதுன்னு தெரியும்? இவ்ளோவ் மழையில் இந்த நேரத்துல நீ இங்க தனியா என்ன பண்ணற?" என்று அவன் அடுத்தடுத்து கேள்வி குண்டுகளை வீச ஆரம்பித்தான்,

'இருடா இன்னும் ஒரு கேள்விக்கே பதில் தெரியல இத்தனை கேள்வி கேட்டா மூலை ஓவர் லோட் ஆகுது' என்று மனதிற்குள் நான் பேசி கொண்டிருந்த நேரத்தில்...

அவன் என் பதிலுக்காக அந்த கூர் பார்வையை வைத்து என் தலைக்குள் துளை போட்டு கொண்டிருக்க என்னால் யோசிக்க முடியாமல் நான் திரு திரு வென முழிக்க அவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்...

"என் கூட பேச நீ ஆஃபீஸ் வரைக்கும் வர தேவை இல்லை யாசின் ஓர் msg இல்லனா கால் பண்ணி இருக்கலாமே"

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Where stories live. Discover now