நீ வேண்டுமே.... எந்த நிலையிலும் எனக்கு நீ போதுமே..
லிரிக்: தாமரை.மழை நின்று ஒரு வழியாக நாங்கள் வெளியே வரும்போது மணி நான்கு, பிறகு ரயில் நிலையத்தை சென்றடைவதற்குள் 6 மணி ஆகி விட்டது, அங்கு போய் சேர்த்தால்... எங்கள் அதிஷ்டம் அன்று இரவு காற்று அதிகம் இருந்ததால் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தன வருவது சந்தேகம் என்றார்கள்,
விஷயத்தை கேட்டதும் அவன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது,
பேருந்தில் கிளம்பலாம் என்று நான் சொன்னதற்கு அவன் காத்திருக்கலாம் என்று சொன்னான், 8மணி ரயில் பத்து மணி ஆகியும் வரவில்லை,
அவன் பொறுமை இழந்து பல்லை கடிக்கும் சத்தம் எனக்கு இங்கு விளங்குகிறது,
எனக்கு என்னதான் இப்போது வாயை திறக்க பயமாக இருந்தாலும் அவனை பார்க்க பரிதாபமாக இருந்ததால்
'seriously யாசீன் உன் நிலைமையே படும் கேவலமா இருக்கு நீ அவன பாத்து பரிதாப படுரியா?'
நான் அவனிடம் ஏதாவது பேசலாம் என்று முன்னாள் போய் நிர்க்க அவனே பேச ஆரம்பித்தான்,
“ரொம்ப லேட் ஆயிடுச்சி இதுக்கு மேல பஸ் கெடக்குமான்னு தெரியல” என்றான்,
“எனக்கு பசிக்கிது ரிஸ்வான்” என்றேன், அவன் முதலில் என்னை ஆச்சர்யத்தில் பார்த்துவிட்டு பிறகு ஒரு மெல்லிய சிரிப்புடன்,
“சரி வா” என்று என்னை அழைத்து கொண்டு அருகில் இருந்த வண்டி கடையில் மிக அருமையான பாராட்டவும் சால்னாவும் வாங்கி முதலில் என் கையில் தந்து விட்டு பிறகு அவனுக்கு ஒன்று வாங்கி கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தவாறு,
“இப்ப என்ன பண்றது?”என்றான்,
“என்ன கேட்டா? நீ தானே எப்பவும் plan பண்ணுவே நீயே யோசி, இந்தியையும் எங்கிலீஷயும் மாத்தி மாத்தி பேசி எதுனா பண்ணு” என்று நான் உலகில் எந்த பிரச்சனையும் இல்லாதவாறு கூளாக சொல்ல
அவன் முதலில் என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு பிறகு
YOU ARE READING
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
Romanceபாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?