மாலை 4 மணி.. சந்துருக்காக வாசலிலே காத்துக் கொண்டிருந்தாள் சாதனா..
அவன் மிகவும் களைப்பாக வந்து சேர்ந்தான்..
" எங்கடா போய்த் தொலைஞ்ச.. காலேஜ்க்கு கூட போகாம " என்றாள் வாசலிலே வழி மறித்தபடி..என்னைத் தொல்லை பண்ணாத..எனக்கு டைம் இல்ல.. டிரெஸ் பேக் பண்ணனும் என்றான் கோபமாக..
எங்க போற
ஹாஷ்டலுக்கு
திடீர்னு என்ன.. எல்லாரும் வந்தப் பிறகு போகலாம்ல..
என்னோட விசயத்துல மூக்க நுழைக்காத.. புரியுதா
இந்த வார்த்தை அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான்.. ஆனால் இன்று ஏனோ வலித்தது..
அவன் டிரஷ் பேக் பண்ணிட்டு இருக்கும் போது அனு உள்ளே வந்தாள்..
" சந்துரு என்ன ஆச்சு.. ஏன் திடீர்னு.. ப்ளீஸ் போகாதடா" என்றாள் கண்ணீரோடு
கோபமாக எதோ சொல்ல வந்தவன் அவள் கண்ணீரைப் பார்த்து எதுவும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்..
அவள் சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு தான் கையில் கொண்டுவந்ததை அவன் பேக்கில் வைத்துவிட்டு சென்று விட்டாள்..
அவன் செல்லும்போது சாதனாவிடம் " நான் நேரடியா ஊருக்கு வந்து அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. உடம்ப பாத்துக்கோ.. காலேஜ்ல மீட் பண்ணலாம் " என்று கூறிச் சென்றான்.
அனுவிடம் அதுவும் சொல்லவில்லை. இரவு லேட்டாக வந்த பிரசாந்த் இதனை அறிந்து அவனுக்கு கால் பண்ண தயாராகும் போது " அண்ணா வேண்டாம்.. அவனுக்கு எது விருப்பமோ.. அப்படியே நடந்துகிடட்டும் .. எதையும் கட்டாயப் படுத்தி வரவைக்க முடியாது" என்று கூறி தடுத்துவிட்டாள்..
தனது ஆடைகளை எடுத்து வைக்கும் போது அதிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான் சந்துரு.
அன்புள்ள சந்துரு...
இது என்னோட லவ் லட்டர் இல்ல.. லவ் வேணானு சொல்ற லட்டர் தான்.. சோ நீ தைரியமா படி..