மொழி 20

6.5K 263 106
                                    

அதிதி உங்க அப்பா லைன்ல என்று பிரசாந்த்  அதிதியிடம் போனைக் கொடுத்தான்.. அது பொய்யென எண்ணி அலட்சியமாக வாங்கியவள் அது உண்மையாக இருக்க பயந்து கொண்டே பேசினாள்.. அவள் பேசும்போதே அவளைக் கைப்பிடித்து அவளை தனது அறைக்கு இழுத்துச் சென்றான்.. ( அதிதியின் தந்தை மிகவும் கண்டிப்பாவர்.. அதும் கைப்பேசி அழைப்பை ஏற்க சிறிது தாமதமானாலும் தன் பிள்ளைக்கு எதாவது ஆபத்து என்றெண்ணிக் கொள்வார். அதனால் பயந்த அதிதி அமைதியாக அவனுடன் சென்றாள்..)

போனை வைத்த அதிதி அவனது முறைப்பைக் கண்டு உண்மையில் அதிர்ந்து போனாள்..  வேறுவழியின்றி அவனிடம் சாதனாவுடனான நட்பைப் பற்றிக் கூறினாள்.. சாதனா தான் பேசினால் மனமாறலாம் என்றும் கூறினாள்.. ஆனால் அதை அவன் விரும்பவில்லை.
தனது காதலை தானே முயன்று அடைய வேண்டும்  என எண்ணினான்..

தன் நிலையை தனது குடும்பத்தாரே எண்ணி வருந்தாத போது அவள் அதிதியை வரவழைத்து தனது சோகத்தைத் தீர்க்க துணிந்தவளுக்கு தன் மீது கண்டிப்பாக அன்பும் காதலும் உண்டு என நினைத்தான்.
சாதனாவிடமே நேராக பேசலாம் என எண்ணி அவளது வீட்டிற்குச் சென்றான்.. அவனைப் பார்த்த யாரும் காதலைச் சொல்ல சென்றவன் என என்ன மாட்டார்கள்..  ஏதோ சண்டைக்குத் தான் செல்கிறான் என எண்ணும் அளவுக்கு இருந்தது அவனது நடவடிக்கை..

"  சாதனா சாதனா " என்று வாசலிலே நின்று கொண்டு உரக்கக் கத்தினான்..அவன் எதற்கு அவ்வாறு கத்துகிறான் என அவனுக்கும் தெரியவில்லை.
அவள் கதவினைத் திறந்து என்ன என்பது போல பார்க்கவும் " வீட்டுக்கு வந்தவங்கள உள்ள வரச் சொல்ல மாட்டீங்களா " என்றான்..

அவளும் முறைத்துக் கொண்டே உள்ளே செல்ல வழி விட்டாள்.. வீட்டிற்குள் சென்று அறையைச் சுற்றிப் பார்த்தவன் " குடிக்க தண்ணீர் கூட கேட்டாதா தருவீங்களா மிஸ்.சாதனா " என்று அதிகாரமாகக் கேட்டான்..  அவன் செய்வது அவனுக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிந்தது.. ஆனாலும் பொறுமையாகப் பேசினால் தான் அம்மணி வெளியே துரத்தி விடுவாளே.. அதனால் வேண்டுமென்றே கோபமாகப் பேசினான்..

காதலின் மொழி (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora