அவள் ஒரு அழுத்தக்காரி , தன் காதலை அவள் எளிதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள் என்று தெரிந்திருந்தாலும் காதலில் களம் காண மகிழ்ச்சியுடன் தாய் நாட்டிற்குத் திரும்பினான் பிரசாந்த்
வீட்டிற்கு செல்லும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை ரோஜாக்களையும் வாங்கிச் சென்றான்.. வீட்டிற்குள் மகிழ்ச்சியுடன் சென்ற அவனுக்கோ அதிர்ச்சி..
அனுவைப் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.. தனது தங்கையின் திருமணத்தைப் பற்றிக் கூட தன்னிடம் யாரும் கூறவில்லை என்று கோபம் தலைக்கேற உள்ளே நுழைந்தான்..
அவன் அனைவரையும் முறைத்துப் பார்க்க, அவர்களோ அவனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. சந்துரு யாருடனோ போனில் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தான்..
அவன் நேரிடையாக அனுவைப் பார்க்கச் சென்றான்.. அனு மகிழ்ச்சியாக தயாராகிக் கொண்டிருந்தாள்..
எல்லாரும் வெளிய போங்க.. நான் அனுக்கிட்ட பேசனும் என்று அவன் சொன்னவுடன்அனைவரும் வெளியேறினர்..
அனு அவனைப் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அனு.. இப்ப இங்க என்ன நடக்குது..
உனக்கென்ன பைத்தியமா.. வெளிய வா நான் எல்லார்கிட்டயும் பேசி புரிய வைக்கிறேன்..என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்..அண்ணா புரியாம பேசாத.. இது தான் எல்லாத்துக்கும் நல்லது புரிதா.. மாப்பிள்ளைக் கூட எனக்கு ஓகே தான்.. என்றாள் சிரித்தபடி..
அவனுக்கு கோபத்தில் அவளை என்ன செய்வதென்றே தெரியவில்லை .. தனது தங்கையின் வாழ்வு திசைமாறிப் போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தான்..
" அண்ணா உன் கோபம் எனக்கு புரியுது.. நாம நினைச்சது எல்லாமே நடக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.. "
முட்டாள் மாதிரி பேசாத .. இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு எல்லாம் சரியாகிடும்.. அதுக்குள்ள அவசரப்படாத..
.
.
.
அவன் எவ்வளவு சொல்லியும் இவள் மாறுவதாகத் தெரியவில்லை..
உடனே அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..